அருகில் இருக்கும் போது கோபு­ரங்கள் உய­ர­மாக தெரி­வ­தில்லை. விட்டு விலகி தூரத்தில் இருக்­கும்­போ­துதான் கோபு­ரத்தின் பிர­மாண்டம் தெரி­கின்­றது

Published on 2018-01-24 08:58:23

24.01.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 11 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச சப்­தமி திதி பகல் 12.15 வரை. அதன்மேல் அஷ்­டமி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.39 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை அஷ்­டமி. மர­ண­யோகம். கரிநாள் சுபம் விலக்­குக. சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சித்­திரை. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் – பால்) பீஷ்­மாஷ்­டமி விசோக ஸப்­தமி விரதம். ஸ்ரீ சூரி­ய­ப­கவான் ஜெயந்தி. ரத­ஸப்­தமி சந்­தி­ர­வி­ரதம்.

மேடம் : நஷ்டம், கவலை

இடபம் : நிறைவு, மகிழ்ச்சி

மிதுனம்    : தனம், சம்­பத்து

கடகம் : தடை, சங்­கடம்

சிம்மம் : வாழ்வு, வளம்

கன்னி : லாபம், லக் ஷ்­மீ­கரம்

துலாம் : களிப்பு, மகிழ்ச்சி

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : லாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் : இன்பம், மகிழ்ச்சி

கும்பம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

இன்று ரத ஸப்­தமி சூரிய ஜெயந்தி. விஷ்­ணு­வா­ல­யங்­களில் சூரிய பிர­பை­யுடன் கூடிய ரத­ஸப்­தமி உற்­சவம் தரி­சித்தால் நம் முன்­னோர்கள் திருப்­தி­ய­டைவர். நவக் கிர­கங்­களில் சூரி­ய­னுக்கு சிகப்பு வஸ்­திரம் அணி­வித்து, செந்­தா­மரை மலர்­களால் அர்ச்­சனை செய்து ஒரு நெய்­வி­ளக்கு வைத்­து­வர சூரிய தோஷம் விலகும்.

(“அருகில்  இருக்கும் போது கோபு­ரங்கள் உய­ர­மாக தெரி­வ­தில்லை. விட்டு விலகி தூரத்தில் இருக்­கும்­போ­துதான் கோபு­ரத்தின் பிர­மாண்டம் தெரி­கின்­றது”)

சுக்­கிரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 3, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிகப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)