19.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 07ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-02-19 08:18:49

சுக்கிலபட்ச துவாதசி திதி முன்னிரவு 11.27 வரை. அதன் மேல் திரயோதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் பின்னிரவு 4.44 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. சித்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் கேட்டை வளர்பிறை சுபநேரங்கள் காலை 9.30 – 10.30 பிற்பகல் 1.30 – 2.30 ராகுகாலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30 குளிகை காலம் 7.30 – 9.00. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)

 

மேடம்: தனம், வரவு

இடபம்: கவலை, கஷ்டம்

மிதுனம்:        வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம்: நன்மை, யோகம்

சிம்மம்: அமைதி, தெளிவு

கன்னி: நம்பிக்கை, காரியசித்தி

துலாம்: அன்பு, ஆதரவு

விருச்சிகம்: பகை, எதிர்ப்பு

தனுசு: மகிழ்ச்சி, சந்தோஷம்

மகரம்: சிக்கல், கவலை

கும்பம்: கவலை, நோய்

மீனம்: சுகம், ஆரோக்கியம்

இன்று மாசி புனர்பூசம் குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம் அருளிய பிரபந்தம் பெருமாள் திருமொழி. ஐந்தாம் திருமொழி. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மா நீ!  ஆளா உனதருளே பார்ப்பன் அடியனே பொருளுரை;  மருத்துவர் புண்ணைக் கத்தியால் கொண்டு அறுத்தாலும் வலிப்பு நோய்க்காக மூட்டுகளில் சுட்டாலும் அவரிடம் நோயாளி அன்போடு பழகுவான் நன்றி தெரிவிப்பான். அது போன்று உன் மாயையால் நீங்காத துயரத்தைத் தந்தாலும் வித்துவக் கோட்டம்மானே! உன் பக்கதனான நான் உன் கருணையையே எதிர்பார்த்து வாழ்கின்றேன். (குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்)

("சுமைகளை தந்துள்ள இறைவன் அதை சுமப்பதற்கான தோள்களையும் தந்துள்ளார்")

சூரியன், குரு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 

பொருந்தா எண்கள் ; ஏனயவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், ஊதாநிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)