"நீங்கள் நாய்க்கு ஒரு பிடி சோறு போடும்­போது, அந்த நாயைக் கட­வு­க­ளாகப் பாவித்து போடுங்கள். அந்த நாயினுள்ளே கடவுள் இருக்­கிறான். அவரே எல்­லா­முமாய் எல்­லா­வற்­றிலும் இருக்­கிறார்."

Published on 2018-01-12 12:09:54

12.01.2018 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 28 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி பின்னிரவு 12.37 வரை. அதன் மேல் துவாதசி திதி. விசாகம் நட்சத்திரம் பகல் 11.06 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை. ஏகாதசி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத் திரம்: அஸ்வினி. சுபநேரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 5.15– 6.00, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார சூலம்–  மேற்கு. (பரிகாரம்– வெல்லம்).   

மேடம் : பிரயாணம், அலைச்சல்

இடபம் : அசதி, வருத்தம்

மிதுனம் : திறமை, முன்னேற்றம் 

கடகம் : கோபம், அவமானம்

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்சிகம்: வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு : தனம், சம்பத்து

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : பணம், பரிசு

மீனம் : பாசம், பரிவு

இன்று தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்­ணு­மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் அதி­காலை தனூர் மாத பூஜை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி. திருப்­பாவை நோன்பு. தேய்­பிறை ஏகா­தசி விரதம். இதற்கு சபலா ஏகா­தசி என்று பெயர். இன்று விர­த­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று.

("நீங்கள் நாய்க்கு ஒரு பிடி சோறு போடும்­போது, அந்த நாயைக் கட­வு­க­ளாகப் பாவித்து போடுங்கள். அந்த நாயினுள்ளே கடவுள் இருக்­கிறான். அவரே எல்­லா­முமாய் எல்­லா­வற்­றிலும் இருக்­கிறார்." – சுவாமி விவே­கா­னந்தர்.)

இன்று சுவாமி விவே­கா­னந்தர் பிறந்­த­தினம். குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)