நோய்­வரும் வரை உண்­பவன், உடல் நல­மாகும் வரை உண்ணா நோன்பு மேற்­கொள்ள வரும்.

2018-01-03 08:48:58

03.01.2018 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 19 ஆம் நாள் புதன்கிழமை.

கிருஷ்ண பட்ச பிரதமை திதி காலை 6.50 வரை. அதன்மேல் துவிதியை திதி. பின்னிரவு 4.36 வரை. பின்னர் திரிதியை திதி. திதி அவபாகம். புனர்பூசம் நட்சத்திரம் பகல் 11.55 வரை பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை சித்தயோகம். சம நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் மூலம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 3.00 – 4.30, ராகுகாலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகைகாலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) வைதிருதி சிரார்த்தம் – சுபநாள்

மேடம் : அசதி, பிரயாணம்

இடபம் :  மகிழ்ச்சி, இன்பம்

மிதுனம்         : வெற்றி, அதிஷ்டம்  

கடகம் : புகழ், வெற்றி

சிம்மம் : பகை, விரோதம்

கன்னி : சுகம், ஆரோக்கியம்

துலாம் : ஆதாயம், இலாபம்

விருச்சிகம் : தடை, இடையூறு

தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : உற்சாகம், மகிழ்ச்சி

கும்பம் : திறமை, முன்னேற்றம்

மீனம் : மகிழ்ச்சி, உற்சாகம்

விஷ்ணுவாலயங்களில் திருப்பாவை “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய். செப்பமுடையாய்! நிழலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய். முப்பத்து  முக்கோடி தேவர்களுக்கும் எட்டுவசுக்கள், பதினொரு ருத்திரர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், அஸ்வினி தேவர் இருவர் முப்பத்தி மூன்று 

தலைமை தேவர்களுக்கும் தலைக்கு ஒரு கோடி தேவர்கள் அவர்கள் நடுக்கத்தை போக்க நீ முன்னின்று யுத்தத்தை ஆரம்பிப் பாய். பகைவர்களுக்கு துக்கத்தை கொடுக்க விமலனே உன்னை துயிலெழுப் புவதற்காக வந்துள்ளோம். “ஆண்டாள் திருவடிகளே சரணம்”

குரு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9 

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல் நிறம், இலேசான மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right