18.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 06ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-02-18 17:39:11

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 12.05 வரை. அதன் மேல் துவா­தசி திதி. ஸர்வ ஏகா­தசி விரதம்.திரு­வா­திரை நட்­சத்­திரம். பின்­னி­ரவு 4.39 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி மரண யோகம் மேல் நோக்கு நாள் . சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அனுஷம். சுப­நே­ரங்கள் காலை 10.30 – 11.30 . ராகு­காலம் 1.30 – 3.00. எம­கண்டம் 6.00 – 7.30 குளி­கை­காலம் 9.00 – 10.30. வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் :வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் :லாபம், லக்ஷ்­மீ­கரம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் :யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் : அமைதி,தெளிவு

கன்னி :தெளிவு, அமைதி

துலாம் :சிக்கல், சங்­கடம்

விருச்­சிகம் :பகை, எதிர்ப்பு

தனுசு :மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் :லாபம், லக்ஷ்­மீ­கரம்

கும்பம் :கவலை, கஷ்டம்

மீனம் :சுகம், இன்பம்

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய "திரு­மாலை" திவ்ய பிர­பந்தம் பாசுரம் 20. பாயும் நீர­ரங்கத் தன்னுள் பாம்­பனைப் பள்ளி கொண்ட தூய தாமரைக் கண்­களும் துவ­ரிதழ் பவள வாயும் அடி­ய­ரோர்க்கு அக­ல­லாமே?" பாயும் காவி­ரி­யாலே சூழப்­பட்ட திரு­வ­ரங்­கத்துள் ஆதி சேஷனைப் படுக்­கையாய் கொண்டு சய­னித்­தி­ருக்கும் அற்­பு­தங்­களை நிகழ்த்­திய மாயனின் திரு­மகள் குடி­யி­ருக்கும் மார்பும் மர­கத மணி­போன்ற பச்சை நிற மேனியும் திருத்­தோள்­களும் பரி­சுத்த தாமரை மலர் போன்ற விழி­களும் சிவந்த அத­ரங்­களும் பவளம் போன்ற நாவினைக் கொண்ட வாயும் மேன்­மை­யான திரு­மு­டியும் பேரொ­ளி­மிக்க சௌந்­தர்­யமும் பக்­தர்­களால் இழக்கக் கூடி­ய­னவா? (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

("மனி­தனின் ஈடு­பாட்­டிற்கு ஏற்ப முயற்­சியில் வெற்­றியின் அளவு அமை­கி­றது")

செவ்வாய், சந்­திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள் 9, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)