ஒரு நாட்டில் நரி நடு­வ­ரானால், வாத்தின் கதி அதோ­க­திதான்

Published on 2017-12-29 09:20:17

29.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 14 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கில பட்ச ஏகா­தசி திதி மாலை 5.48 வரை. பின்னர் துவா­தசி திதி. பரணி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.31 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. ஏகா­தசி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரங்கள் சித்­திரை, சுவாதி. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு­கா­லம 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம் –மேற்கு (பரி­காரம் –வெல்லம்)

மேடம் : வீண்செலவு, பற்றாக்குறை

இடபம் : சங்கடம், தொல்லை

மிதுனம்   : லாபம், லக் ஷ்மீகரம்

கடகம் : யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் : கவனம், எச்சரிக்கை

கன்னி : திறமை, முன்னேற்றம்

துலாம் : சந்தோஷம், மகிழ்ச்சி

விருச்சிகம்   :  நிறைவு, பூர்த்தி

தனுசு : கவனம், சஞ்சலம்

மகரம் : களிப்பு, மகிழ்ச்சி 

கும்பம் : வாழ்வு, வளம்

மீனம் : களிப்பு, கொண்டாட்டம்

இன்று ஸர்வ வைகுண்ட ஏகா­தசி/ சொர்க்க வாயி­லோ­தசி இதற்கு முக்­கோண ஏகா­தசி விரதம் என்பர். இதனை அனுஷ்­டிப்­பது மூன்­று­கோடி ஏகா­தசி விர­தங்­களை அனுஷ்­டித்த பலன் ஏற்­படும். நாளை அதி­காலை கொழும்பு – தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் துவா­தசி தீர்த்த வாரி உற்­சவம். எம்­பெ­ருமான் ஸ்ரீ தேவி பூதேவி நாச்­சி­யார்­க­ளுடன் தீர்த்­த­மாடும் வேளை அடி­ய­வர்­களும் தீர்த்­த­மா­டலாம்.

(“ஒரு நாட்டில் நரி நடு­வ­ரானால், வாத்தின் கதி அதோ­க­திதான்” – அமெ­ரிக்க முது­மொழி)

அதிர்ஷ்ட எண்கள்: 7, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)