"அரை­கு­றைப்­பண்­பாடு ஆடம்­ப­ரத்தை விரும்பும். நிறைந்த பண்­பாடு எளி­மையை விரும்பும்”

Published on 2017-12-24 08:42:28

24.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 9 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 9.59 வரை. அதன்மேல் ஸப்­தமி திதி. சதயம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.36 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ஆயி­லியம், மகம். (கரிநாள் சுபம் விலக்­குக). சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளி­கை­காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்). சுக்­கி­ல­பட்ச சஷ்டி விரதம், பிள்­ளையார் நோன்பு (நக­ரத்தார்).

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நட்பு, நலம்

மிதுனம் : இலாபம், லக் ஷ்மீகரம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : வரவு, லாபம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : சுபம், மங்­களம்

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : பிரிவு, கவலை

கும்பம் : நட்பு, உதவி

மீனம் : பிரிவு, பிடி­வாதம்

தெஹி­வளை விஷ்­ணு­வா­ல­யத்தில் அதி­காலை திருப்­பாவை நோன்பு உற்­சவம், பகல் திரு­மஞ்­சனம், அன்­ன­தானம். உத­யத்தில் சிவா­ல­யங்­களில் திரு­வெம்­பாவை பூஜா­ரம்பம். “ஆதியும் அந்­தமும் இல்லா அரும்­பெ­ருஞ்­சோ­தியை யாம் பாடக்­கேட்­டேயும் வான்­த­டங்கண் ஈதே எந்­தோழி பரிலோர் எம்­பாவாய்.” பொரு­ளுரை: உள்ளம் நிறைந்த இளம்­பெண்கள் மார்­கழி மாதம் பாவை நோன்பு நோற்க அதி­கா­லையில் எழுந்து செல்­கின்­றார்கள். மற்­றைய பெண்­களை துயில் எழுப்­பு­வ­தாக அமைந்­துள்­ளது முதற்­பாடல். ஏனைய பாடல்­களின் பொருள்கள் தொடரும்.

("அரை­கு­றைப்­பண்­பாடு ஆடம்­ப­ரத்தை விரும்பும். நிறைந்த பண்­பாடு எளி­மையை விரும்பும்”)

சுக்கிரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)