17.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 05ஆம் நாள் புதன் கிழமை

Published on 2016-02-17 08:52:10

சுக்கிலபட்ச தசமி திதி பின்னிரவு 1.09 வரை. அதன் மேல் ஏகாதசிதிதி. மிருகசீரிஷம் நட்சத்திரம். பின்னிரவு 5.01 வரை. பின்னர் திருவாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி சித்தயோகம். வளர்பிறை சுப முகூர்த்தம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் விசாகம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30 பாலை 4.30 – 5.30. ராகுகாலம் 12.00 – 1.30. எமகண்டம் 7.30 – 9.00 குளிகைகாலம் 10.30 – 12.00. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)

 

மேடம்: பகை, எதிர்ப்பு

இடபம்: தடை, சஞ்சலம்

மிதுனம்:     வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம்: மகிழ்ச்சி, சந்தோஷம்

சிம்மம்: பணம், பரிசு 

கன்னி: சுகம், ஆரோக்கியம்

துலாம்: தடை, தாமதம்

விருச்சிகம்: வரவு, லாபம்

தனுசு: சிக்கல், சங்கடம்

மகரம்: சுபம், மங்களம்

கும்பம்: பகை, விரோதம்

மீனம்: நன்மை, மங்களம்

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர் நாக மூர்த்தி சயனமாய் ஆகமூர்த்தி ஆயவண்ணம் என் கொல் ஆதி தேவனே! என்று திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வார் பாடுகின்றார். இறைவன் ஒருவனே. அவன் கொண்ட கோலங்கள் பலவாகும். “ஆகாஷாத் பதிதந்தோயம் யதாகச்சதிசாகரம்” என்று ஓர் அசுர குழந்தையான பிரகலாதன் தன் தந்தையான இரணிய கசிபுக்கு உபதேசம் பண்ணுகின்றான். பொருள்; ஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத்துளிகள் பல நதிகளின் வழியாக கடலைச் சென்றடைவதுபோல் நாம் எம் மதத்தில் எந்த மொழியில் பிறந்தவர்களாயினும் இறுதியில் இறைவனிடம் சென்று அடைகிறோம். இதில் தமிழ் கடவுள் சிங்களம், கிறிஸ்தவம், இஸ்லாமியம் என்ற பாகுபாடு கிடையாது. நாம் எத்தனை பிரார்த்தனை செய்தாலும் எமது பிராரப்த கர்மா, சஞ்சித கர்மா என்ற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற பலனை அவன் கொடுப்பதாக கீதையில் கண்ணன் கூறுகின்றான். (நாளை திருமாலை தொடரும்) 

("ஆன்மீகம் என்னும் சந்தனத்தில் அரசியல் சாக்கடையைச் சேர்க்காதீர்கள்")

சனி,சூரியன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 

பொருந்தா எண்கள் 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)