“ஓர் அர­சி­யல்­வாதி அடுத்த தேர்­தலைப் பற்றி எண்­ணு­கிறான். இரா­ஜ­தந்­திரி அடுத்த தலை­மு­றையைப் பற்றி எண்­ணு­கிறான்”

Published on 2017-12-20 10:53:44

20.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 5 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச துவி­தியை திதி மாலை 4.51 வரை. அதன் மேல் திரு­தியை திதி. பூராடம் நட்­சத்­திரம் பகல் 1.21 வரை. பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவி­தியை. அமிர்­த­யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மிரு­க­சீ­ரிஷம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) சாக்­கியர் நாயனார் குரு­பூஜை.

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம்        : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : சினம், பகை

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : பரிவு, பாசம்

துலாம் : புகழ், பாராட்டு

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : வாழ்வு, வளம்

மகரம் :பொறுமை, அமைதி

கும்பம் : அசதி, வருத்தம்

மீனம் : அமைதி, பொறுமை

மார்­கழி மாதம் தனூர் மாத பூஜை. அதி­காலை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி பூஜை. இச்­சுவை தவிர யான்போய் இந்­திர லோக­மாளும் அச்­சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நக­ரு­ளானே! திருப்­பாவை 6. ஆயர் குலத்தில் தோன்றும் அணி­வி­ளக்கை வாயினாற் பாடி மனத்­தினால் சிந்­திக்க, தீயினில் தூசாகும் செப்­பேலோ ரெம்­பாவாய். துவா­ரகா நிலைய வாச­னான கண்­ணனை அர்ச்­சித்து வாயினால் பாடித் தியா­னித்தால் நம் குற்­றங்கள்  தீயினில் இட்ட தூசாகப் பொசுங்­கி­விடும். தெஹி­வளை ஸ்ரீ விஷ்ணு வால­யத்தில் பகற்­பத்து உற்­சவ ஆரம்பம்.

(“ஓர் அர­சி­யல்­வாதி அடுத்த தேர்­தலைப் பற்றி எண்­ணு­கிறான். இரா­ஜ­தந்­திரி அடுத்த தலை­மு­றையைப் பற்றி எண்­ணு­கிறான்” –ஜேம்ஸ் கிளார்க்)

சந்­திரன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 7, 6

பொருந்தா எண்கள் : 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்   : பச்சை, கலந்த நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)