“கைக்கு அருகில் உள்ள முதல் கட­மையைச் செய். அடுத்த கடமை என்­ன­வென்று தானே புலப்­படும்”

Published on 2017-12-19 10:41:43

19.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 04ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி பிற்­பகல் 2.47 வரை. அதன் மேல் துவி­தியை திதி. மூலம் நட்­சத்­திரம் பகல் 10.49 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். அதிதி. கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிஷம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார­சூலம்– வடக்கு (பரி­கா­ரம்–பால்). சந்­திர தரி­சனம். சகல விஷ்­ணு­வா­ல­யங்­க­ளிலும் காலை திருப்­பாவை. திரு­நள்­ளாறு. சனி மாற்றம்.

மேடம் : முயற்சி, முன்­னேற்றம்

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம்         : புகழ், பெருமை

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : நிறைவு, பூர்த்தி

கன்னி : யோகம், அதிர்ஷ்டம்

துலாம் : உதவி, நட்பு

விருச்­சிகம் : உழைப்பு, உயர்வு

தனுசு : அன்பு, இரக்கம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : சினம், பகை

மீனம் : தோல்வி, கவலை

இன்று சனிப்­பெ­யர்ச்சி சனி பகவான் காலை மணி 9.59 க்கு விருச்­சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிர­வே­சிக்­கின்றார். இதனை முன்­னிட்டு தெஹி­வளை ஸ்ரீவெங்க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் காலை, மாலை விஷேட பிரிதி ஹோமங்கள், அபி­ஷே­கங்கள், சனி பக­வா­னுக்கு நடை­பெறும். மார்­கழி தனுர் மாத பூஜை, திருப்­பள்­ளி­யெ­ழுச்சி பூஜை, திருப்­பாவை ஓதல் இடம்­பெறும்.

(“கைக்கு அருகில் உள்ள முதல் கட­மையைச் செய். அடுத்த கடமை என்­ன­வென்று தானே புலப்­படும்”      –கார் லைல்)

சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9

பொருந்தா எண் : 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள் : மஞ்சள்,  சாம்பல் நிற வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)