திருப்­பாவை ஓதி பல்­லாண்டு பாடி அதில் உள்ள அர்த்­தங்­களை வல்லோர் வாயில் கேட்­டி­ருந்து உகந்து வாழ்­வோ­மாக !

2017-12-16 09:30:07

16.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 1 ஆம் நாள் சனிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி காலை 8.51 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. அனுஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.45 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்­தசி சித்­த­யோகம் சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பரணி. சுப­நே­ரங்கள்: பகல்10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார­சூலம்– கிழக்கு (பரி­கா­ரம்–­தயிர்) மாத சிவ­ராத்­திரி புண்­ய­காலம். விஷ்­ணு­வா­லய வழி­பாடு, கெருட தரி­சனம் நன்று.

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : அன்பு, இரக்கம்

மிதுனம்         : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : வீண், செலவு பற்­றாக்­குறை

சிம்மம் : அதிர்ஷ்டம், யோகம்

கன்னி : வரவு, லாபம்

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : பிர­யாணம், அசதி

தனுசு : தெளிவு, அமைதி

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை 

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : அமைதி, சாந்தம்

இன்று மார்­கழி (தனூர்) மாதப் பிறப்பு மாதங்­களில் நாள் மார்­கழி என்றார் கீதையில் துவா­ரகைக் கண்ணன். தெஹி­வளை, ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் அதி­காலை தனூர் மாத பூஜா­ரம்பம், திருப்­பள்­ளி­யெ­ழுச்சி பாடல்கள் பூஜை, திருப்­பாவை நோன்பு, பூமிப் பிராட்டி ஆண்­டா­ளாக அவ­த­ரித்து திருப்­பா­வையில் பர­ம­ன­டி­பாடி, உத்­தமன் பேர்­பாடி, கேச­வ­னைப்­பாடி நாம் உய்­யு­மாறு உகந்து காட்­டி­யுள்ளார்.

இப்­பாவை நோன்பு மார்­கழித் திங்கள் மதி­கொண்ட நன்­நாளில் நாமும் திருப்­பாவை ஓதி பல்­லாண்டு பாடி அதில் உள்ள அர்த்­தங்­களை வல்லோர் வாயில் கேட்­டி­ருந்து உகந்து வாழ்­வோ­மாக. ஆண்டாள் திருவ­டி­களே சரணம்.

கேது, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 7, 8, 9

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right