பரிசுகளைக் கொடுத்து நண்பர்களை சேர்க்காதே. நீ கொடுப்பது நின்றால் அன்பு நின்றுவிடும்

Published on 2017-12-14 10:05:56

14.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 28 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி காலை 6.33 வரை. அதன் மேல் துவா­தசி திதி. சுவாதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.50 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவா­தசி. அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­த­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) விவாக சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : பிர­யாணம், அலைச்சல்

கடகம் : நிறைவு, பூர்த்தி

சிம்மம் : குழப்பம், சங்­கடம்

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : பணம், பரிசு

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் : ஓய்வு, அசதி

மீனம் : கவனம், எச்­ச­ரிக்கை

இன்று கிருஷ்­ண­பட்ச வைஷ்­ணவ ஏகா­தசி விரதம். உப­வா­ஸ­மி­ருந்து மகா விஷ்­ணுவை வழி­படல் நன்று. பர­மாத்மா என்னும் சொல் மகா­விஷ்­ணுவை மட்­டுமே குறிக்கும். அவனே பராத்­பரன், ஜகத்­கா­ர­ண­பூதன், ஸர்வ வியா­பகன், ஸர்வ நியா­மகன், பரம காரு­னியன், ஸர்­வ­லோக சரண்யன், ஸர்வ சக்­தி­யுக்தன், ஸத்­ய­காமன், ஆபஸ்­தகன், ஸக­லார்த்­தி­கரன், ஏகா­தசி நாளான இன்று துவா­ரகா நாத­னான எம் பெரு­மானை வழி­ப­டுதல் நன்று.

புதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)