15.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 03ஆம் நாள் திங்கட் கிழமை

Published on 2016-02-15 09:00:51

சுக்கிலபட்ச அஷ்டமி திதி முன்னிரவு 4.25 வரை. அதன் மேல் நவமிதிதி. பரணி நட்சத்திரம் காலை 8.13 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை அஷ்டமி சித்தியோகம் காலை 8.13 வரை. பின்னர் மரணயோகம் காரத்திகை விரதம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் சித்திரை. சுபநேரங்கள் காலை 6.30 – 7.30 – 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 7.30 – 9.00 குளிகை காலம் 1.30 –3.00. எமகண்டம் 10.30 – 12.00 வார சூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்).

மேடம்: சோர்வு, வருத்தம்

இடபம்: கோபம், அவமானம்

மிதுனம்:     வரவு, லாபம்

கடகம்: நட்பு, உதவி

சிம்மம்: நலம், ஆரோக்கியம்

கன்னி: நன்மை, அதிர்ஷ்டம்

துலாம்: முயற்சி, முன்னேற்றம்

விருச்சிகம்: வீரம், துணிவு

தனுசு: அன்பு, பாசம்

மகரம்: சுபம், மங்களம்

கும்பம்: கவலை, கஷ்டம்

மீனம்: அன்பு, பாசம்

தொண்டர் அடியாழ்வார் அருளிய திருமாலை பாசுரம் 18 “இனித்திரைத் திவலை மோத எறியும் தன்பரவை மீதே கண்ணனைக் கண்ட கண்கள் பணியரும்பு உதிருமாலோ? என் செய்கேன் பாவியனே? பொருளுரை” இனிய அலைகளால் ஏற்படும் துளிகள் அடிக்க, குளிர்ந்த காவரியில் தனியாக சயனித்து பக்தர்களை ஆளும் செந்தாமரைக் கண்ணனும், என் தெய்வமும் கோவைப் பழம் போன்று சிவந்த வாயுடையவனுமான கண்ண பிரானைக் கண்டவிழிகள் குளிர்ச்சியான நீர் அரும்புகளை உதிர்க்கும் இதனால் கண்நிறையப் பெருமானை சேவிக்க முடியாத பாவியானேன்” (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

("ஓர் ஆடு சிக்கினால் நல்லவர்கள் அதன் உரோமத்தை மட்டுமே கத்தரித்துக் கொள்வர். ஆனால் அரசியல் வாதிகள் அதன் தோலை உரித்துவிடுவர்.")

சுக்கிரன், சனி கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6 

பொருந்தா எண்கள் 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)