“வயிறு நிறைந்துள்ள போதும் மேலும் உண்பவர்கள், தங்கள் பற்களாலேயே தங்க ளுக்கு சவக்குழி தோண்டிக் கொள்கின் றார்கள்”

Published on 2017-12-11 09:27:03

11.12.2017 ஏவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை.

கிருஷ்ண பட்ச அஷ்டமி திதி காலை 6.54 வரை. அதன் மேல் நவமி திதி மறுநாள் காலை 6.13 வரை. பின்னர் தசமி திதி. திதி அவமாகம் உத்தரம் நட்சத்திரம் இரவு 11.21 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் –கிழக்கு (பரிகாரம் –தயிர்) 

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : செலவு, விரயம்

மிதுனம் : இலாபம், லக் ஷ்மீகரம்

கடகம் : வரவு, இலாபம்

சிம்மம் : போட்டி, ஜெயம்

கன்னி : திறமை, முன்னேற்றம்

துலாம் : பகை, விரோதம்

விருச்சிகம் : மறதி, விரயம்

தனுசு : புகழ், பாராட்டு

மகரம் : அன்பு, இரக்கம்

கும்பம் : கவனம், எச்சரிக்கை

மீனம் : அன்பு, பாசம்

கார்த்திகை நான்காவது சோமவாரம் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை. மகாகவி பாரதியார் பிறந்த நாள் “தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்”.

(“வயிறு நிறைந்துள்ள போதும் மேலும் உண்பவர்கள், தங்கள் பற்களாலேயே தங்க ளுக்கு சவக்குழி தோண்டிக் கொள்கின் றார்கள்” – துருக்கி நாட்டு முதுமொழி)

சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)