ஆண்டவனின் கருணை ஆயுள் காப்பீட்­டைப் போன்றது. அது தகுந்த சமயத்தில் உனக்கு அளவற்ற உதவியைச் செய்யும்.

Published on 2017-12-07 09:34:03

07.12. 2017 ஏவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் நாள் வியாழக்கிழமை.

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி பகல் 1.16 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. பூசம் நட்சத்திரம் பின்னிரவு 2.13 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். திதித்வயம். சிரார்த்த திதிகள். தேய்பிறை சதுர்த்தி பஞ்சமி. மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம். அமிர்த சித்தயோகம். சுபநேரம் பகல் 10.30– 11.30, ராகுகாலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகைகாலம் 9.00– 10.30, வாரசூலம் தெற்கு (பரிகாரம் – தைலம்) விவாக சுபமுகூர்த்த நாள்.  

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : தடை, இடையூறு

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : கோபம், பகை

கன்னி : அச்சம், பயம்

துலாம் : புகழ், பெருமை

விருச்சிகம் : சிரமம், தடை

தனுசு : வீண்செலவு, பற்றாக்குறை

மகரம் : முயற்சி, முன்னேற்றம்

கும்பம் : காரியசித்தி, அனுகூலம்

மீனம் : முயற்சி, புகழ்

இன்று பூசம் நட்சத்திரம் வியாழக்கி ழமை. குருபகவான் இந் நட்சத்திர தேவதையாவார். இன்று குரு பகவானை வழிபட கலை ஞானம் அஷ்டமாசித்திகள் தனம், சம்பத்து, ஒழுக்கம், பிரபல்யம், சுருதி, ஸ்மிருதி, ஸத்விசயம், சாந்தம் முதலியன ஏற்படும்.

கேது, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 7, 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான நீலம், மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)