12.02.2016 மன்­மத வருடம் தை மாதம் 29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-02-12 09:02:48

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி திதி பகல் 1.20 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம் பகல் 12.58 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி சித்­தா­மிர்த யோகம் மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரம், உத்­தரம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்)

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : ஆதாயம், லாபம்

மிதுனம் : திறமை, முன்­னேற்றம்

கடகம் : பக்தி, அனுக்­கி­ரகம்

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : சாந்தம், அமைதி

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : பகை, பயம்

தனுசு : லாபம், லஷ்­மீ­கரம்

மகரம் : நன்மை, யோகம்

கும்பம் : உயர்வு, ஊக்கம்

மீனம் : கவலைஇ நஷ்டம்

தொண்­ட­ரடி பொடி­யாழ்வார் அரு­ளிய “திரு­மாலை” “மெய்­யர்க்கே மெய்­ய­னாகும் விதி­யிலா என்னைப் போலப் பொய்­யர் க்கே பொய்­ய­னாகும் புட் கொடி­யு­டைய கோமான். அழகனூர் அரங்­க­மன்றே” பொரு­ளுரை; கருடக் கொடி­யு­டைய தேவாதி தேவன், மெய்­யான ஆர்­வ­மி­ருந்தும் பகவான் பற்றி முழு­மை­யாக அறிவும் விதி இல்­லாத என்னைப் போல் அபாக்­கி­ய­வான்­க­ளுக்கு மெய்­ய­னாக இருந்து தன் வடிவைக் காட்டி அருள்வான். சம்­சார இன்­பங்­களே சதம் என்­றி­ருப்­ப­வ­ருக்கு பொய்­ய­னாக மறைந்­தி­ருப்பான். கடைத்­தேற எண்­ணு­ப­வ­ருக்கு இறைவன் ஒரு­வனே என்று உணர்த்­து­பவன் காட்­சி­ய­ளிக்கும் அழ­கான ஊர் திரு­வ­ரங்­க­மாகும். (“வயிற்றை எளிதில் நிரப்பி விடலாம். கண்­ணையும் மன­தையும் திருப்தி செய்­வது கடினம்”) குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9, 1

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, சாம்பல் நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)