“ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன். ஆனால் கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்”

Published on 2017-11-30 09:59:11

30.11.2017 ஏவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 14 ஆம் நாள் வியாழக்கிழமை.

சுக்கிலபட்ச துவாதசி திதி பின்னிரவு 4.06 வரை. அதன் மேல் திரயோதசி திதி. ரேவதி நட்சத்திரம் பகல் 1.11 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை துவாதசி. சித்த அமிர்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரம், அஸ்தம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45. ராகுகாலம் 1.30 – 3.00. எமகண்டம் 6.00 – 7.30. குளிகைகாலம் 9.00 – 10.30. வாரசூலம் – தெற்கு. ( பரிகாரம் – தைலம்) சுபமுகூர்த்த நாள். வைஷ்ணவ ஏகாதசி. விவாக சுப முகூர்த்தம்.

மேடம் : தடை, தாமதம்

இடபம் : வெற்றி, யோகம்

மிதுனம்          : உயர்வு, மேன்மை

கடகம் : யோகம், வெற்றி

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : பகை, விரோதம்

துலாம் :  ஓய்வு, அசதி

விருச்சிகம் : தனம், சம்பத்து

தனுசு : உதவி, நட்பு

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : சிரமம், தடை

மீனம் : சுகம், ஆரோக்கியம்

இன்று ரேவதி நட்சத்திரம். திருவோணத் தின் அதிபதியான அழகிய மணவாளனான, ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளை இன்று வழிபடல் நன்று. நாளை வெள்ளிக்கிழமை “பரணி தீபம்”.

(“ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன். ஆனால் கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்” – போலந்து நாட்டுப் பழமொழி.)

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்   : 1, 5, 9

பொருந்தா எண்கள்  : 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை, மஞ்சள் கலந்த வர்ணங்கள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)