இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதனால் தடுக்க முடியாது. இறைவன் தடுக்க நினைப்பதை மனிதனால் கொடுக்க முடியாது

2017-11-28 08:53:51

28.11.2017 ஏவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

சுக்கில பட்ச நவமி திதி காலை 6.40 வரை. அதன் மேல் தசமி திதி மறுநாள் காலை 6.17 வரை. பின்னர் ஏகாதசி திதி (திதி அவமாகம்) பூரட்டாதி நட்சத்திரம் பகல் 1.29 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை தசமி. மரணயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) திருவண்ணாமலை அருணாசல நாயகர் அறுபத்து மூவருடன் இரவு வெள்ளி ரதத்திலும் அம்பாள் வெள்ளி இந்திர விமா னத்திலும் பவனி.

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : சிரமம், தடை

மிதுனம்         : களிப்பு, மகிழ்ச்சி

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : பகை, விரோதம்

கன்னி : வரவு, இலாபம்

துலாம் : திறமை, முன்னேற்றம்

விருச்சிகம் : அன்பு, பாசம்

தனுசு : இலாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : காரியசித்தி, அனுகூலம் 

கும்பம் : நற்செயல், பாராட்டு

மீனம் : சித்தி, காரியானுகூலம்

இன்று பூரட்டாதி நட்சத்திரம். குபேரன் இந் நட்சத்திர தேவதையாவார். இன்று லக் ஷ்மி குபேர பூஜை செய்திட சங்க நிதி, பதும நிதி போன்ற செல்வங்கள் கிட்டிடும்.

(“இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதனால் தடுக்க முடியாது. இறைவன் தடுக்க நினைப்பதை மனிதனால் கொடுக்க முடியாது – நபிகள் நாயகம்)

சூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right