“குழந்­தையைத் தூக்கி வைத்­துக்­கொள்­ளும்­போது கை நோகி­றது. ஆனால் அதை கீழே இறக்­கிய பின் மனம் நோகி­றது”

Published on 2017-11-26 08:58:48

26.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி நாள் முழு­வதும். திதி திரிதினஸ் பிருக்கு. அவிட்டம் நட்­சத்­திரம். பகல் 11.53 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. மர­ண­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூசம் ஆயி­ல்யம். சுப நேரங்கள் பகல் 10.45 – 11.45. மாலை 3.15 – 4.15. ராகு காலம் 4.30 – 6.00 எம­கண்டம் 12.00 – 1.30, குளி­கை­காலம் 3.00 – 4.30, வார­சூலம் –மேற்கு. (பரி­காரம் – வெல்லம்) பானு ஸப்­தமி, துர்க்­காஷ்­டமி, சூரிய விரதம். 

மேடம் : லாபம், லஷ்­மீ­கரம்

இடபம் : நற்­செயல், பாராட்டு

மிதுனம் : விருத்தி, அதிர்ஷ்டம்

கடகம் : நலம், ஆரோக்­கியம்

சிம்மம் : ஜெயம், புகழ்

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : அமைதி, சாந்தம்

விருச்­சிகம் : பண­வ­ரவு, செலவு

தனுசு : தனம், சம்­பத்து

மகரம் : வரவு, லாபம்

கும்பம் : லாபம், லஷ்­மீ­கரம்

மீனம் : வரவு, லாபம்

இன்று சதயம் நட்­சத்­திரம். யமன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். மிருத்­யுஞ்­சய ஜெபம் செய்தல் யம பயத்தைப் போக்கும். இன்று தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்­ணு­மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் திரு­மஞ்­சனம், தீபா­ரா­தனை, சகஸ்­ர­நாம அர்ச்­சனை நடை­பெற்று பக்­தர்­க­ளுக்கு அன்­ன­தானம் வழங்­கப்­படும்.

(“குழந்­தையைத் தூக்கி வைத்­துக்­கொள்­ளும்­போது கை நோகி­றது. ஆனால் அதை கீழே இறக்­கிய பின் மனம் நோகி­றது” – போலந்து நாட்டு முது­மொழி)

சனி, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்,