இன்று நாக பூஜா பஞ்­சமி. நாக தோஷ நிவர்த்தி, புற்றில் பால் இடு­வதால் சர்ப்ப தோஷ நிவர்த்­தி­யாகும்.

Published on 2017-11-23 09:17:10

23.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 07 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 3.16 வரை. அதன்மேல் சஷ்டி திதி. உத்­தி­ராடம் நட்­சத்­திரம் நாள்­மு­ழு­வதும். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி. சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வா­திரை. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45. பிற்­பகல் 12.15 – 1.15. ராகு­காலம் 1.30 – 3.00. எம­கண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00 – 10.30. வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)திரு­வண்ணா மலை ஸ்ரீ அரு­ணா­சல நாயகர் உற்­சவ ஆரம்பம். நாக பூஜை. விவாஹ சுப முகூர்த்­தங்கள். விநா­யகர் வழி­பாடு நன்று.

மேடம் : போட்டி, ஜெயம்

இடபம் : பெருமை, புகழ்

மிதுனம்         : உயர்வு, மேன்மை

கடகம் : நலம், ஆரோக்­கியம்

சிம்மம் : நன்மை, யோகம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : பிர­யாணம், அசதி

தனுசு : பகை, விரோதம்

மகரம் : வெற்றி, அதிர்ஷ்டம் 

கும்பம் :அலைச்சல், பொருள் விரயம்

மீனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இன்று நாக பூஜா பஞ்­சமி. நாக தோஷ நிவர்த்தி, புற்றில் பால் இடு­வதால் சர்ப்ப தோஷ நிவர்த்­தி­யாகும்.

(“அன்பில் மூழ்­குவோம், கோபத்­தினால் பட­ப­ட­வென்று பேசா­தீர்கள். உங்கள் கோபத்தை தீய வார்த்­தை­களால் மற்­றவர் மீது கொட்டித் தீர்க்­கா­தீர்கள். நாம் கோபப்­படும் போது நர­கத்தில் வாழ்­கின்றோம். அன்பில் மூழ்கும் போது சொர்க்­கத்தில் நுழைந்து விடு­கின் றோம்.” –ரஜனீஷ்)

புதன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 5,1,9

பொருந்தா எண் : 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: நீலம், மஞ்சள், சாம்பல் நிறம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)