“நாக்கு 3 அங்­குலம் தான் நீளம். ஆனால், 6 அடி உய­ர­முள்ள மனி­த­னையும் கொன்­று­விடும் ஆற்றல் கொண்­டது. ஆகவே சிந்­தித்து பேசு”

Published on 2017-11-22 09:22:07

22.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 06 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி திதி. பின்­னி­ரவு 01.21 வரை. அதன்மேல் பஞ்­சமி திதி. பூராடம் நட்­சத்­திரம். மறுநாள் காலை 06.05 வரை. பின்னர் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. அமிர்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள் காலை 09.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 09.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்).   சதுர்த்தி விரதம். விநா­ய­கப்­பெ­ருமான் வழி­பாடு.

மேடம் : போட்டி, ஜெயம் 

இடபம் : ரோகம், வருத்தம்

மிதுனம்         : தனம், சம்­பத்து

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : இன்சொல், மகிழ்ச்சி

கன்னி : அன்பு, இரக்கம் 

துலாம் : உயர்வு, மேன்மை 

விருச்­சிகம் : வீண்­செ­லவு, விரயம் 

தனுசு : இலாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : காரி­ய­சித்தி, சம்­மதம்

கும்பம் : நட்பு, உதவி

மீனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

இன்று பூராடம் நட்­சத்­திரம். ஜல தேவ­தை­யான வருணன் இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். பஞ்­ச­பூத தத்­து­வத்தில் ஜலத்­துக்கு அதி­ப­தி­யான திரு­வா­னைக்கா இறை­வ­னான சிவனின் அம்­ச­மான ஜம்­பு­கேஸ்­வ­ர­ரையும் அகி­லாண்­டேஸ்­வரி தாயா­ரையும் இன்று வழி­ப­டுதல் நன்று. 

(“ நாக்கு மூன்று அங்­குலம் தான் நீளம். ஆனால், ஆறு அடி உய­ர­முள்ள மனி­த­னையும் கொன்­று­விடும் ஆற்றல் கொண்­டது. ஆகவே சிந்­தித்து பேசு”– ஜப்­பா­னிய பழ­மொழி)

ராகு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 7, 4, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான நீலம். 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)