சுண்டு விரலில் வெள்ளி மோதி­ரம் அணி­வதால் ஏற்படும் மாற்றங்கள்

2017-11-19 11:54:45

வேத ஜோதிட கருத்­துப்­படி வெள்ளி என்­பது வியாழன்,  சந்­திரன் கோள்களை குறிக்­கி­றது. நமது உடலில் உள்ள ஐம்­பெரும் பூதங்­க­ளான நீர், கபம் இரண்­டையும் சம­நி­லை­ப­டுத்­து­கி­றது. வேத சாஸ்­தி­ரங்­களை எடுத்துக் கொண்டால் வெள்ளி உலோகம் அணிந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு வாழ்க்­கையில் அதிர்ஷ்டம், அழகு, செல்வம் மற்றும் சந்­தோஷம் என்று எல்லாம் கை கூடி வரும் என்று சொல்­­கி­றது. வேத ஜோதி­டப்­படி நீங்கள் வியாழன் மற்றும் சந்­திர கோள்­களின் முழுப்­ப­ய­னையும் பெற விரும்­பினால் அதற்கு வெள்ளி உலோகம் சிறந்த ஒன்­றாக விளங்­கு­கி­றது. மேலும் இதை நமது உடலில் அணியும் போது நமது உடலில் உள்ள கெட்ட நச்­சுக்­களை வெளி­யேற்றி உடலை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்க உத­வு­கி­றது.

வாழ்க்­கையில் உதிக்கும் நேர்­மறை எண்­ணங்கள்: வீட்டை  வெள்ளி பொருட்­களால் அலங்­க­ரிக்கும் போது நமது வீட்டில் நேர்­மறை எண்­ணங்கள் உத­ய­மா­கின்­றன. வெள்ளி அணி­க­லன்கள், வெள்ளி பாத்­தி­ரங்கள், வெள்ளி அழகு பொருட்கள் என்று வைக்கும் போது நமது உள்­ளத்­திலும் வாழ்க்­கை­யிலும் நேர்­மறை எண்­ணங்கள் தோன்­று­கின்­றன.

குழப்­பங்கள் விலகும் : நீங்கள் சமா­ளிக்க முடி­யாத நோயு­டனோ அல்­லது மனக் குழப்­பங்கள், பிரச்­சி­னைகள் இவற்­றுடன் காணப்­பட்டால் அந்த சம­யங்­களில் இந்த வெள்ளி உலோகம் உங்கள் மனதில் ஒரு நிம்­ம­தி­யையும் அமை­தி­யான அலை­க­ளையும் இட்டுச் செல்­கி­றது. உங்கள் சுண்டு விரலில் அணிந்­தி­ருக்கும் வெள்ளி மோதி­ரத்தை ஒரு தண்ணீர் பெளலில் வைத்து பார்த்தால் அது ஆற்­றலை கிர­கிக்கும் சக்­தி­யுடன் காணப்­ப­டு­வது தெரியும்.

வெள்ளி மோதி­ரத்தை கொண்டு ஆற்­றலை சுத்தம் செய்யும் முறை: இதற்கு 3 முறைகள் செய்­யப்­ப­டு­கின்­றன. முதலில் ஒன்­லைனில் அல்­லது மார்க்­கெட்டில் வெள்ளி மோதிரம் வாங்கி கொள்­ளுங்கள். ஒரு வியா­ழக்­கி­ழமை அன்று இரவு முழு­வதும் தண்­ணீரில் வெள்ளி மோதி­ரத்தை வைத்து விடுங்கள். இது ஆற்­றலை சுத்தம் செய்ய செ­யற்­ப­டு­கி­றது. இப்­பொ­ழுது இந்த மோதி­ரத்தை நீங்கள் கும்­பிடும் பூஜை அறையில் வைத்து மன­தார கட­வு­ளிடம் பிரார்த்­திக்க வேண்டும். இப்­பொ­ழுது இந்த மோதிரம் உங்­க­ளுக்கு நிறைய பலன்­களை கொடுக்க கூடி­ய­தாக அமையும்.

ஆச்­ச­ரி­ய­மான பலன் : கடை­சி­யாக இந்த மோதி­ரத்தை சந்­தன கட்­டையில் வைத்து முன்­னாடி உள்ள ஆற்­றல்­களை எல்லாம் தூய்மை செய்து உங்கள் அழ­கான சுண்டு விரலில் அணிந்து கொள்­ளுங்கள். இதற்கு அப்­புறம் உங்கள் மனதில் தோன்றும் எண்­ணங்கள் மற்றும் நீங்கள் செய்யும் செயல்­களை கவ­னித்து பாருங்கள் .கண்­டிப்­பாக ஆச்­சர்­ய­மான பலன்கள் கிடைக்கும்.

பலன்கள் வெள்ளி மோதி­ரத்தை அணி­வதால் கிடைக்கும் நன்­மைகள் என்­ன­வென்று பார்த்தால் இது உங்கள் அழகை அதி­க­ரிக்கும், உங்­க­ளது ஆளுமை திறனை வியாழன் மற்றும் சந்­திரன் கோள்­க­ளோடு இணைக்கும், உங்கள் கோபத்தை கட்­டுப்­ப­டுத்தி உங்­களை எப்­பவும் கூலாக சந்­தோ­ஷ­மாக வைத்­தி­ருக்கும். 

மூட்டு பாதிப்­புகள் : உங்கள் ஜாத­கத்தில் சந்­திரன் வலு­வி­ழந்து காணப்­பட்டால் உங்கள் அறி­வு­பூர்­வ­மான எண்­ணங்கள் பல­வீ­ன­ம­டைந்து மற்றும் நோய்கள் காணப்­படும்.

ஆனால் இந்த வெள்ளி மோதிரம் சந்­திரன் பார்­வைக்கு வலுக்­கொ­டுத்து பலம் தந்து உங்கள் இருமல், சளி, மூட்டு வலிகள் மற்ற எல்லா மூட்டு சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னைகள் இவற்­றை­யெல்லாம் சரி­யாக்கும்.

வெள்ளி செயின்: நீங்கள் மோதி­ர­மாக அணிய விருப்பம் இல்­லை­யென்றால் வெள்ளி செயி­னாக அணிந்து கொள்­ளலாம். இதுவும் வெள்ளி மோதி­ரத்தை போன்ற எல்லா நன்­மை­க­ளையும் அள்ளிக் கொடுக்கும். நீங்கள் இதை செயி­னாக அணி­வதால் உங்கள் தொண்டை சக்­க­ரத்­திற்கு வலுக்­கொ­டுத்து தொண்டை சம்­பந்­தப்­பட்ட பிரச்சி­னைகள், குரல் பிரச்­சி­னைகள் போன்­ற­வற்றை சரி­செய்யும்.

வெள்ளி பொருட்கள்: வெள்ளி மோதிரம் மற்றும் செயின்­களை போல வெள்ளி ஸ்பூன், கரண்டி போன்­ற­வை­களும் முக்­கி­ய­மா­னவை. வெள்ளி பெளலில் தேன் இட்டு அதை வெள்ளி ஸ்பூனால் பரு­கினால் ஜல­தோஷம், சைனஸ் போன்ற பிரச்­சி­னைகள் சரியாகும்.

நோய் எதிர்ப்பு செல்கள் : வெள்ளி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கிறது. எனவே நோய்கள் நடமாடும் இந்த நவீன உலகத்தில் இந்த வெள்ளி உலோகம் மிகவும் இன்றியமையாதது ஆகும். இதனால் ஆரோக்கியமான வாழ்வு பெற்று வாழவும் முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right