10.02.2016 மன்மத வருடம் தை மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-02-10 09:42:57

சுக்கிலபட்ச துவிதியை திதி மாலை 5.46 வரை. அதன் மேல் திரிதியை திதி. சதயம் நட்சத்திரம் மாலை 3.59 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை சித்தாமிர்த்த யோகம்.மேல்நோக்கு நாள். வளர்பிறை சுபமுகூர்த்த நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆயில்யம், மகம். சுபநேரங்கள் காலை 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 09.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் வடக்கு (பரிகாரம்– பால்). அப்பூதி அடிகள் நாயனார் குருபூஜை.

மேடம்: பணம், பரிசு

இடபம்: சினம், பகை

மிதுனம்: உயர்வு, மேன்மை

கடகம்: நற்செய்தி, பாராட்டு

சிம்மம்: தனம், சம்பத்து

கன்னி: உழைப்பு, உயர்வு

துலாம்: இலாபம், லக் ஷ்மீகரம்

விருச்சிகம்: உயர்வு, மேன்மை

தனுசு: நலம், ஆரோக்கியம்

மகரம்: பொறுமை,  அமைதி

கும்பம்: நன்மை, யோகம்

மீனம்: வாழ்வு, வளம்

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய ‘திருமாலை’ பாசுரம் 13 " எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்.  அரங்கமென்று அழைப்பாராகில்"  பொருள் அலைகள் வீசுகின்ற தனிப்பட்ட மணமுடைய கடலாலே சூழப்பட்ட பெரிய இப்பூமியில் உள்ள மானிடரெல்லாம் மிகுந்த வாசனையும் அழகுமுடைய துளசி மாலையை அணிந்துள்ள தேவர்களின் தலைவனை வழிப்பட பிறந்துள்ளனர். ஞானம் அற்ற மனிதர் எல்லாம் திருவரங்கம் என்று கூறுவார்களேயானால் ஐம்பொறிகளின் விருப்பப் படி வாழ்ந்து நரகங்கள் எல்லாம் புல் முளைத்து பாழாகி இருக்குமன்றோ.  

(ஆழ்வார் திருவடிகளே சரணம்).

 

(“மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். தன்னைப் பற்றி அறிந்தவன் அறிவாளி. ”)

சூரியன், குரு ஆதிக்கம் கொண்ட நாள் இன்று. 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணம்: ஊதா, மஞ்சள் நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)