“இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் பாலங்கள் கட்டுங்கள்; சுவர்களை எழுப்பாதீர்கள்”

Published on 2017-11-13 09:24:58

13.11.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 27 ஆம் நாள் திங்கட்கிழமை

கிருஷ்ணபட்ச தசமி திதி மாலை 3.52 வரை. பின்னர் ஏகாதசி திதி. பூரம் நட்சத்திரம் மாலை 3.38 வரை. பின்னர் உத்திரம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை தசமி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00. வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் –தயிர்)

மேடம் : கவனம், எச்சரிக்கை

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம்         : விவேகம், வெற்றி

கடகம் : அச்சம், பகை

சிம்மம் : பிரயாணம், அச்சம்

கன்னி : தனம், சம்பத்து

துலாம் : வீம்பு, சச்சரவு 

விருச்சிகம் : புகழ், பெருமை

தனுசு : இன்பம், சுகம்

மகரம் : ஆசை, அன்பு

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : அன்பு, பாசம்

இன்று பூரம் நட்சத்திரம் அம்பிகை பராசக்தி இந் நட்சத்திர தேவதையாவார். சக்தி வழிபாட்டில் காயத்திரி மந்திரம். இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ஓம்! உடல் ஆன்மா தெய்வீக வாழ்வுக்குரிய (பூர், புவ, சுவ) உலகங்களுக்கு மூலாதாரமாய் உள்ள (தத்சவிதுர்) போற்றுதலுக்குரிய யாவரினிலும் மேலான தெய்வீக மெய்மையின் (வரேண்யம் தேவஸ்ய) தெய்வீக பேரொளி மீது (போர்கோ) நாம் தியானக்கிறோம். (தீமஹி) நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம் (தத்) நம் (த) அறிவுக்கு (தியோ) ஒளியூட்டட்டும் (பிரசோதயாத்). 

(“இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் பாலங்கள் கட்டுங்கள்; சுவர்களை எழுப்பாதீர்கள்”) 

ராகு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று,

அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 7, 4

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இலேசான நீலம், பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)