"முட்டாளோடு சண்டை போடாதே. பார்க்கிறவர்களுக்கு யார் முட்டாள் எனத் தெரியாது

Published on 2017-11-03 08:52:59

03.11.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

சுக்கில பட்ச சதுர்த்தசி திதி பிற்பகல் 1.16 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 4.25 வரை. அதன் மேல் பரணி நட்சத்திரம் சிரார்த்த திதி பௌர்ணமி. சித்தாமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்தம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) பிருந்தாவன பூஜை. துளசி விரதம். திருமூலர் குருபூஜை சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம். சுபமுகூர்த்த நாள்.

மேடம் : முயற்சி, முன்னேற்றம்

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம்         : புகழ், பெருமை

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : நிறைவு, பூர்த்தி

கன்னி : யோகம், அதிர்ஷ்டம்

துலாம் : உதவி, நட்பு

விருச்சிகம் : உழைப்பு, உயர்வு

தனுசு : அன்பு, இரக்கம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : சினம், பகை

மீனம் : புகழ், செல்வாக்கு

இன்று சந்திர ஜெயந்தி. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, வெள்ளை புஷ்பங்களால் அர்ச்சனை செய்து நெய்விளக்கு வைக்க, சந்திரதோஷம் விலகும். சந்தோஷம் உண்டாகும். பௌர்ணமி  விசேட பூஜை. சத்ய நாராயண பூஜை. தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் பகல் சத்ய நாராயண பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும்.

("முட்டாளோடு சண்டை போடாதே. பார்க்கிறவர்களுக்கு யார் முட்டாள் எனத் தெரியாது")

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)