09.02.2016 மன்மத வருடம் தை மாதம் 26 ஆம் நாள் செவ்வாய்கிழமை

Published on 2016-02-09 10:57:58

சுக்கிலபட்ச பிரதமை திதி முன்னிரவு 7.42 வரை. அதன் மேல் சுவிதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 5.13 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை. சித்த யோகம் சந்திர தரிசனம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டமம் நட்சத்திரங்கள் பூசம் ஆயில்யம். சுபநேரங்கள் காலை 6.30– 07.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 09.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார சூலம் வடக்கு (பரிகாரம்– பால்). 

மேடம்: பிணி, பீடை

இடபம்: செலவு, விரயம்

மிதுனம்: வரவு, லாபம்

கடகம்: சிக்கல், சங்கடம்

சிம்மம்: நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி: கவலை, கஷ்டம்

துலாம்: பாசம், அன்பு

விருச்சிகம்: சுகம், ஆரோக்கியம்

தனுசு: மகிழ்ச்சி, சந்தோசம்

மகரம்: புகழ், பெருமை

கும்பம்: அன்பு, ஆதரவு

மீனம்: நட்பு, உதவி

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய ‘திருமாலை’ பாசுரம் 12 " நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள். கேட்க நகரமே சுவர்க்கமாகும். நாமங்களுடையவன் நம்பி." பொருள் முத்கலன் என்கின்ற கொடியவன் மரிக்க எம தூதர்கள் அவனை கட்டி நரகத்தின் வாசலில் கொண்டி நிறுத்த எமன் "முத்கலனிடம் நீ ஒருமுறையாவது விஷ்ணுவின் நாமத்தை கூறியிருந்தால் இப்படி வந்திருக்க மாட்டாய் என்று நாராயண நாமத்தில் பெருமையை எடுத்துக் கூறுகின்றார். இந்த சம்பாஷணை நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் காதில் விழுந்தது. கேட்டவர்களுக்கு காதில் விழுந்ததால் நரகமே சொர்க்கமாயிற்று. கேட்ட பெருமை இவ்வாறு இருந்தால் ஸ்ரீரங்கா உன் பெயரை வாயால் சொன்னால் எவ்வளவு நற்பலன்கள் உண்டாகும். 

(ஆழ்வார் திருவடிகளே சரணம்).

 

(“பூச்சிகள் ஆடையை தயாரிக்கின்றன. அப்படியே பொறாமை மனிதனை அரிக்கின்றது. ”)

செவ்வாய் சந்திரன் ஆதிக்க நாள் இன்று. 

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)