இடை­யூ­று­களும், துன்­பங்­க­ளுமே மனி­தனை மனி­த­னாக்­கு­பவை

Published on 2017-10-30 09:21:15

30.10.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 13 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கில பட்ச தசமி திதி மாலை 3.41 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. சதயம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.22 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை தசமி திதி. சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயில்யம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்) சுப­மு­கூர்த்த நாள். காற்­ற­ழுத்த தாழ்வு மண்­டலம் மழை பெய்யும் வாய்ப்பு.

மேடம் : அன்பு, பாசம்

இடபம் : மறதி, விரயம்

மிதுனம் : சினம், பகை

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : பிர­யாணம், செலவு

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : ஜெயம், புகழ்

தனுசு : லாபம், லக் ஷ்­மீ­கரம்

மக­ரம் : இன்பம், மகிழ்ச்சி

கும்பம் : தனம், சம்­பத்து

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

இன்று ஐப்­பசி சதயம் நட்­சத்­திரம். பேயாழ்வார் திரு நட்­சத்­திரம். அவ­த­ரித்த ஊர் திரு­ம­யிலை (மயி­லாப்பூர்) மாதம் ஐப்­பசி. நட்­சத்­திரம் சதயம். அம்சம் நந்­த­காம்சம். அரு­ளிய பிர­பந்தம்; மூன்றாம் திரு­வந்­தாதி. திருக்­கண்டேன் என நூறும் செப்­பினான் வாழியே!  சிறந்த ஐப்­பசி சதயம் செனித்த வள்ளல் வாழியே! பெருக்­க­முடன் திரு­ம­ழிசை பிரான் தொழுவோன் வாழியே! பேயாழ்வார் தாளிணை இப்­பெ­ரு­நி­லத்தில் வாழியே!

குரு, புதன் முத­லான சுபகி­ர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9, 

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ் சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)