“கர்வம் பிடித்த புத்திசாலியை விட அன்பான முட்டாளே மேல்”

Published on 2017-10-23 09:11:49

23.10.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் திங்கட்கிழமை.

சுக்கில பட்ச சதுர்த்தி திதி நாள் முழுவதும். திதி திரிதியை பிருக்கு. அனுஷம் நட்சத்திரம் மாலை 3.18 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை, சதுர்த்தி. சித்தயோகம் கரிநாள் (சுபம் விலக்குக) சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி. சுபநேரங்கள் காலை 6.15 – 7.15, 9.15 – 1015, மாலை 4.45 – 5.15, ராகு காலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)

மேடம் : அமைதி, நிம்மதி

இடபம் : திறமை, முன்னேற்றம்

மிதுனம் : முயற்சி, முன்னேற்றம்

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : தனம், லாபம்

கன்னி : வெற்றி, யோகம்

துலாம் : நன்மை, முன்னேற்றம்

விருச்சிகம் : செலவு, விரயம்

தனுசு : லாபம், லக்ஷ்மீகரம்

மகரம் : காரியசித்தி, அனுகூலம்

கும்பம் : தனம், சம்பத்து

மீனம் : அனுகூலம், காரியசித்தி

சுக்கில பட்ச சதுர்த்தி விரதம் பூசலார் நாயனார் குருபூஜை ஸ்கந்த சஷ்டி விரதம். சகல சுப்பிரமணிய ஸ்தலங்களிலும் ஸ்ரீ முருகப் பெருமான் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், நாக சதுர்த்தி துர்வா கணபதி விரதம்.

(“கர்வம் பிடித்த புத்திசாலியை விட அன்பான முட்டாளே மேல்”) 

புதன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  வெளிரான நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)