17.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

2017-10-17 09:14:45

17.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

கிருஷ்ணபட்ச திரயோதசி பின்னிரவு 12.47 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. பூரம் நட்சத்திரம் காலை 7.48 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரயோதசி. சித்தாமிர்ந்த யோகம். கீழ்நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரம் அவிட்டம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகைகாலம் 12.00– 1.30, வார சூலம் –வடக்கு (பரிகாரம்– பால்) திருமலை நம்பி திருநட்சத்திரம்.

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் : லாபம், லக் ஷ்மீகரம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : புகழ், சாதனை

சிம்மம் : கவனம், எச்சரிக்கை

கன்னி : ஜெயம், வெற்றி

துலாம் :காரியசித்தி, அனுகூலம்

விருச்சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : தனம், சம்பத்து

மகரம் : பக்தி, ஆசி

கும்பம் : புகழ், செல்வாக்கு

மீனம் : நிறைவு பூர்த்தி

இன்று பிரதோஷ விரதம் சந்தியா காலத்தில் சிவவழிபாடு நன்று. இரவு சந்திர உதயத்தில் நரக சதுர்த்தசி ஸ்நானம். விஷு புண்ணிய காலம்.

(“சந்தேக பிராணிகள் மனிதர்கள். அதனால்தான் பீரோவிற்கு கண்ணாடி வைத் துள்ளனர். பணம் எடுக்கும்போது எடுப்பது நாம் தானா என்பதை உறுதி செய்து கொள் கின்றனர்”)

சனி, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right