07.02.2016 மன்மத வருடம் தை மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

Published on 2016-02-06 09:55:56

07.02.2016 மன்மத வருடம் தை மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி முன்னிரவு 10.40 வரை. அதன் மேல் அமாவாஸ்யை திதி உத்தராடம் நட்சத்திரம் மாலை 6.45 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம், போதாயன அமாவாஸ்யை திருவோண விரதம். சிரார்த்த திதி சதுர்த்தசி அமிர்த யோகம், மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர் பூசம். சுபநேரங்கள் காலை 7.30– 8.30, பகல் 10.30–11.30 மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்)

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : கவலை, கஷ்டம்

கடகம் : லாபம், ஆதாயம்

சிம்மம் : நோய், வருத்தம்

கன்னி : பிணி, பீடை

துலாம் : மகிழ்ச்சி, சந்தோஷம்

விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : தடை, தாமதம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : தடங்கல், தாமதம்

"தொண்டரடி பொடியாழ்வார் அருளிய திருமாலை" நாட்டினான் தெய்வமெங்கும் காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கும் உய்யும் வண்ணம். பொருள் எம் பெருமான் எல்லா இடங்களிலும் தனது பிரதிநிதியாக பல தெய்வங்களை நிலை நிறுத்தினான். கடைந் தேற விரும்புவர்களுக்கு மோட்சம் பெற திருவரங்கத்தில் திருப்பாற்கடல் போல் பள்ளி கொண்டான். சான்றோர்களே! கேளுங்கள். கருடவாகனமாக திருமால் இருக்க மூதேவியிடம் செல்வம் வேண்டி நிற்கலாமோ?

(“வில் இருந்தால் வேட்டையாடலாம். அன்புச் சொல் இருந்தால் கோட்டையை பிடிக்கலாம்.”)

கேது செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 5, 6

பொருந்தா எண்கள் : 2,7,8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்