“வியர்வை உலர்வதற்கு முன்பாகவே தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்து விடுங்கள்”

2017-10-13 09:48:04

13.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி காலை 8.12 வரை. அதன் மேல் நவமி திதி மறுநாள் காலை 6.04 வரை. பின்னர் தசமி திதி. திதி அவமாகம். புனர்பூசம் நட்சத்திரம் பகல் 12.24 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை நவமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகைகாலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் –வெல்லம்)

மேடம் : வெற்றி, அசதி

இடபம் : லாபம், லக் ஷ்மீகரம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : புகழ், செல்வாக்கு

சிம்மம் : பகை, விரோதம்

கன்னி : சிந்தனை, தெளிவு

துலாம் : சிக்கல், சங்கடம்

விருச்சிகம் : சிந்தனை, குழப்பம்

தனுசு : அமைதி, நிம்மதி

மகரம் : தடை, இடையூறு

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : அன்பு, பாசம்

தெஹிவளை நெடுமால் ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம் பிரம்மோற்சவம் எட்டாம் நாள் திருவிழா. எம்பெருமான் அஸ்வ (குதிரை) வாகனத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நாளை புரட்டாதி இறுதி சனி வாரம். ரதோற்சவம் காலை 6.00 மணிக்கு நேரில் ஆரோகணித்து 7.00 மணிக்கு புறப்படுதல்.

(“வியர்வை உலர்வதற்கு முன்பாகவே தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்து விடுங்கள்” –நபிகள் நாயகம்)

ராகு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right