09.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி 23 ஆம் நாள் திங்கட்கிழமை.

Published on 2017-10-09 09:24:02

09.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி 23 ஆம் நாள் திங்கட்கிழமை.

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி மாலை 5.33 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. கார்த்திகை நட்சத்திரம் மாலை 5.47 வரை. பின்னர் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்த்தி. கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி, விசாகம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகைகாலம் 1.30– 3.00, வாரசூலம் –கிழக்கு (பரிகாரம் –தயிர்) கார்த்திகை விரதம்.

மேடம் : நலம், ஆரோக்கியம்

இடபம் : பக்தி, அனுக்கிரகம்

மிதுனம் : வரவு, இலாபம்

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : வெற்றி, ஜெயம்

கன்னி : தனம், சம்பத்து

துலாம் : கவலை, சங்கடம்

விருச்சிகம் : சினம், பகை

தனுசு : செலவு, விரயம்

மகரம் : இன்பம், மகிழ்ச்சி

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம் : முயற்சி, முன்னேற்றம்

தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தான பிரம்மோற்சவ வைபவத்தில் இன்று எம் பெருமான் சிறிய திருவடியாகிய அனுமத் சேவையில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலிப்பார். “அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான். அவனெம்பை அளித்துக்காப்பான். அஞ்சனை மைந்தா போற்றி! அஞ்சினை வென்றாய் போற்றி! வெஞ்சின கதிர்பின் சென்று பிழுமறை உணர்ந்தாய் போற்றி! மஞ்சன மேனி ராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி! எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி! ஆஞ்சநேயனே போற்றி! போற்றி!

செவ்வாய், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)