Widgets Magazine

இம்முறை வியாழமாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்குத் தரும் நன்மைகள்

Published on 2017-10-08 09:47:43

அமை­தி­யாக இருக்கும் ஒரு வீட்­டிலோ அல்­லது நிசப்­த­மாக இயங்கும் ஓர் அலு­ல­கத்­திலோ இடை­யி­டையே கதையும் பேச்சும் கல­க­லப்பும் வெடிச்­சி­ரிப்பும் கிளம்­பு­கி­ற­தென்றால் அந்த இடங்­களில் யாரோ கன்னி ராசிக்­கா­ரர்கள் இருக்­கி­றார்கள் என்­றுதான் அர்த்தம். ஆனால் ஒன்றுஇ என்­னதான் கதை­யிலும் களிப்­பிலும் சுவா­ரஸ்யம் காட்­டி­னாலும் சரி­யான நேரத்தில் கச்­சி­த­மாக வேலை­களை முடித்­து­வி­டு­வார்கள். இந்த ராசியில் மூன்று நட்­சத்­தி­ரங்கள் இணைந்­துள்­ளன. உத்­தரம் 2, 3, 4 ஆம் பாதங்கள் அத்தம் நான்காம்பாதம் மற்றும் சித்­திரை 1, 2 ஆம் பாதங்­களே அவை­க­ளாகும். இந்த ராசிக்­கா­ரர்­களில் சித்­திரை நட்­சத்­தி­ரக்­கா­ரர்கள் மட்டும் கொஞ்சம் கருத்­தூன்றி வேலை பார்ப்­பார்கள். 

“சேர் சும்மா சொல்­லக்­கூ­டாது; இந்த உடையில் பார்க்க சரியா ரஜி­னிகாந்த் மாதி­ரியே இருக்­கி­றீங்க” என்று மேல­தி­கா­ரிக்கு ‘ஐஸ் வைப்­பதும் “இது மாமாங்கப் பிள்­ளையார் கோயில் பிர­சாதம் சேர்! மிச்சம் விசே­ட­மா­னது. நான் இம்­முறை திரு­வி­ழா­வுக்குப் போன­போது மறக்­காமல் உங்கள் மூட்டு வலிக்­காக அர்ச்­சனை செய்­து­கொண்டு வந்தேன். பூசிக்­கொள்­ளுங்க சேர்!” என்று பரி­வுடன் பேசி அதி­கா­ரியை நெகி­ழ­வைப்­பதும் இவர்­க­ளுக்கு கைவந்த கலை. 

கன்­னியின் ராசி­நா­த­னான புதனே தொழில் ராசி­யான மிது னத்­திற்கும் நாய­க­னாக வரு­வதால் இந்த ராசி­யினர் எதிலும் கருத்­தூன்றி வேலை­செய்­வார்கள். யாரும் குறுக்­கீடு செய்­யாமல் சுதந்­தி­ர­மாக வேலை செய்ய விட்­டு­விட்டால் கொடுத்த வேலையை வித்­தி­யா­ச­மா­கவும் சிறப்­பா­கவும் செய்து முடிப்­பார்கள். “நான் மட்டும் இல்­லாட்டி இந்தக் கம்­ப­னியே அவ்­வ­ள­வுதான்” என்று சில வேளை­களில் தலைக்­க­னத்­தோடு எடுக்கும் முடி­வுகள் அவ்­வப்­போது சறுக்­கலை ஏற்­ப­டுத்தும். 

இந்த ராசி­யி­லுள்ள பலரும் என்­னதான் உத்­தி­யோகம் பார்த்­தாலும் 45 வய­துக்கு மேல் சொந்தத் தொழிலில் ஈடு­ப­டு­வார்கள். தாங்கள் சம்­பா­தித்­ததை நான்கு பேருக்கு உதவும் விதத்தில் செல­வ­ழிக்கும் குணமும் இவர்­களில் அநே­க­ருக்கு இருக்­கி­றது. 

அதி­கா­ரி­களின் கெடு­பி­டிகள் தாங்­காது வெளி­யே­று­ப­வர்கள் இந்த ராசியில் அதி­க­முண்டு.

ஒரு­வ­ரது பிறந்த சாத­கத்தில் ராசிக்கோ இலக்­கி­னத்­திற்கோ பத்­தா­வது வீட்டில் புதனும் வியா­ழனும் செவ்­வாயும் கூடி­யி­ருந்­தாலோ அல்­லது இவற்றில் ஒரு கிர­க­மா­வது இடம் பெற்­றி­ருந்­தாலோ செய்யும் தொழிலில் சறுக்­கல்­களும் சங்­க­டங்­களும் ஏற்­ப­டத்தான் செய்யும். புத­னோடு சனியோ அல்­லது சுக்­கி­ரனோ சேர்ந்­தி­ருந்தால் பெரிய தொழிற்­சாலை வைத்து நடத்­து­வீர்கள். பங்­குச்­சந்­தையில் இறங்கி பெரி­தாகச் சாதிப்­பீர்கள். சிலர் நீதி­ப­தி­க­ளாக பத­வி­யேற்று அதி­ர­டி­யான தீர்ப்­பு­களால் குற்­ற­வா­ளி­க­ளுக்கு சிம்ம சொப்­ப­ன­மாக விளங்­கு­வீர்கள். செய்யும் வேலை­களில் நிறை­யப்­பணம் கிடைத்­தாலும் மன­துக்குப் பிடித்­த­மான வேலைதான் வேண்­டு­மென்று தேடு­வீர்கள். 

தொடர்ந்தும் ஒரு நிறு­வ­னத்தில் அடி­மட்­டத்தில் வேலை பார்க்க விரும்ப மாட்­டீர்கள். கந்­தோரில் யார் என்ன சந்­தே­கத்தைக் கேட்­டாலும் அலுக்­காமல்இ சலிக்­காமல் திரும்பத் திரும்ப விளக்­கு­வீர்கள். உங்­க­ளது ஆலோ­ச­னை­க­ளுக்­கா­கவே பலரும் காத்­தி­ருப்பர். எவ­ருக்கும் தன்­னம்­பிக்­கை­ய­ளிக்கும் விதத்தில் உங்கள் பேச்சு இருக்கும்.

உத்­தர நட்­சத்­தி­ரத்­திற்கு அதி­பதி சூரியன். ராசிக்கு அதி­பதி புதன். இந்த அமைப்பை ‘பு­தா­தித்­திய யோகம்’ என்பர். ‘ரவி­புத’ யோக­மென்றும் கூறுவர். இந்த அமைப்பு உள்­ள­வர்­க­ளிடம் எல்­லா­வற்­றிலும் நிபு­ணத்­துவம் இருக்கும். அதற்­கான வித்­து­வ­கர்­வமும் முரட்­டுத்­த­னமும் இருக்கும். எவர் கருத்­துக்கும் செவி­­ம­டுப்­பார்­களே தவிர தங்கள் மன­துக்குச் சரி­யெனப் படும் முடி­வையே எடுப்­பார்கள். முது­குக்குப் பின்னால் எழும் விமர்­ச­னங்­க­ளுக்கு எல்லாம் அஞ்­ச­மாட்­டார்கள். எதிலும் மற்­ற­வர்­க­ளி­லி­ருந்து வித்­தி­யா­சப்­ப­டவே விரும்­பு­வார்கள். அவ­ரவர் பணி­யி­டங்­களில் இதர ஊழி­யர்­க­ளி­லி­ருந்து வித்­தி­யா­சப்­ப­டவே விரும்­பு­வார்கள். அங்­குள்ள பல­ருக்கும் முன்­னு­தா­ர­ணமாய் விளங்­கு­வார்கள். யாரைப் பற்­றியும் எந்­தப்­புகார் வந்­தாலும் சட்­டென்று ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். தற்­பு­கழ்ச்சி அறவே பிடிக்­காது. எந்தப் புகழ்ச்­சிக்கும் தான் தகு­தி­யா­ன­வன்­தானா என்ற கேள்வி உள்­ளூர இருந்­து­கொண்­டே­யி­ருக்கும். அலு­வ­ல­கத்தில் நண்­பர்­க­ளிடம் கடன் கொடுக்கல் வாங்­கல்கள் வைத்துக் கொள்­ள­மாட்­டார்கள். வேலையில் தவறு செய்தால் தயங்­காமல் மன்­னிப்புக் கேட்­பார்கள். பார்க்கப் பர­ப­ரப்­போடு காணப்­பட்­டாலும் வேலை­களில் நேர்­மையும் நேர்த்­தி­யு­மி­ருக்கும்.

உத்­தரம் இரண்டாம் பாதத்தில் பிறந்­த­வர்கள் இலத்­தி­ர­னியல் மற்றும் மின்­னியல் பொறி­யி­ய­லா­ளர்கள், தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் குற்­ற­வியல் சட்­டத்­த­ர­ணிகள், பத்­தி­ரிகை நிரு­பர்கள்இ பல்­குரல் (மிமிக்ரி) கலைஞர், ஓவியர், மருந்­தாளர்இ விலங்­குகள் சர­ணா­லயப் பணி­யாளர், இன்னும் இவர்­களில் சிலர் வீணை, தபேலா, புல்­லாங்­குழல், பியானோ போன்ற இசைக்­க­ரு­விகள் இயக்­கு­வ­திலும் தனித்­தி­றமை பெற்று சாதிப்பர். ஊயவநசiபெ ளுநசஎiஉந குயளவ குழழன தொழில்­களும் இவர்­களில் சில­ருக்கு நன்கு கைவரும்.

உத்­தரம் மூன்றாம் பாதத்தில் பிறந்­த­வர்­க­ளுக்கு நிறு­வ­னங்­களில் பொது­சனத் தொடர்பு உத்­தி­யோகம் கண­னியைக் கையா­ளு­வதில் தனித்­தி­றமை, நீதி­மன்றப் பணி, விமானி, தொலைத்­தொ­டர்புத் துறைஇ பிறப்பு– இறப்பு பதி­வாளர்இ நக­ர­சபை ஊழியர்இ கண்­ணாடித் தொழிற்­சா­லை­யில்­பணி, கார் ஓட்டோ உதி­ரிப்­பாக விற்­பனைஇ சிகை அலங்­காரம், கூரியர் சேவை என்று சில குறிப்­பிட்ட துறைகள் எளி­தாகக் கைவரும். 

உத்­தரம் நான்காம் பாதத்­தினர் உள­வியல் விரி­வு­ரை­யாளர் உடற்­கல்விப் போத­னா­சி­ரியர், நரம்­பியல், வைத்­திய நிபுணர் பாலர் பாட­சாலை, விளை­யாட்டுச் சாமான்கள் தயா­ரிப்பும் விற்­ப­னையும், தொல்­லியல் ஆய்­வாளர், மரத்­த­ள­பாட விற்­பனை. பட்­டி­மன்றப் பேச்­சாளர், மொழி­பெ­யர்ப்­பாளர் வன இலாகா அதி­காரி என்று குறிப்­பிட்ட சில துறை­களில் தனித்­துவம் பெறுவர்.

நீங்கள் அந்த நட்­சத்­தி­ரத்தில் பிறந்­த­வ­ரானால் உங்­க­ளுக்­கென்றே சில திற­மைகள்இ தனிச்­சி­றப்­புகள் உள்­ளன. வியா­பா­ரத்தில் எவ்­வ­ளவு பெரிய இழப்பு ஏற்­பட்­டாலும் இடிந்து போய் மூலைக்குள் முடங்­கி­விட மாட்­டீர்கள். அடுத்­த­டுத்து காரி­யங்­களில் கவனம் செலுத்தி இழந்­த­வற்றை ஈடு­செய்ய முயல்­வீர்கள். புத­னு­டைய ராசியில் சந்­திரன் வரு­வதால் புத­னது ஏட்­ட­றிவும் சந்­தி­ர­னது அனு­பவ அறிவும் ஒரு­சேரச் சங்­க­மித்துக் காணப்­படும். அலு­வ­ல­கத்தில் உங்­க­ளுக்கு தெரி­யாத விட­யங்­களே இல்­லை­யென்ற அள­வுக்குப் புகழ்­வார்கள். எவ்­வ­ளவு பெரிய அதி­கா­ரி­யாக இருந்­தாலும் தயக்­க­மின்றி உங்கள் அபிப்­பி­ரா­யங்­களை சொல்­வீர்கள். வியா­பா­ரத்தில் அதிக முத­லீடு செய்­யாமல் ஆதாயம் பார்க்கும் சாமர்த்­தியம் உங்­க­ளுக்­குண்டு. நெருக்­க­டி­யான நேரங்­களில் பிறரைத் தூண்­டி­விட்டு உங்­களை உயர்த்திக் கொள்ளும் தந்­தி­ரமும் தெரியும். அலு­வ­ல­கத்தில் உங்­களைச் சுற்றி ஒரு கூட்­டமே இருக்கும். அவர்­க­ளோடு பரிச்ச­யமாய்ப் பேசி காரியம் சாதித்துக் கொள்­வீர்கள்.. கஷ்­டங்­களும் கவ­லை­களும் உங்­க­ளுக்குத் தூசு!

சித்­திரை நட்­சத்­தி­ரத்தின் முத­லிரு பாதங்­களும் கன்னி ராசி­யிலும் 3 ஆம் 4 ஆம் பாதங்கள் துலா ராசி­யிலும் இடம்­பெ­று­கின்­றன. கன்­னி­யி­லுள்ள முதலாம் இரண்டாம் பாதங்­களில் பிறந்­த­வர்கள் வாழ்க்­கையில் எதற்கும் விட்டுக் கொடுத்­துப்­போ­வார்கள். அதனால் உற்­ற­வர்கள் உற­வி­னர்கள் மத்­தியில் சுத்த ஏமா­ளி­யென்று பேரெ­டுப்­பார்கள். அறி­வு­ஜீ­வி­யாக இருந்­தாலும் அலு­வ­ல­கத்தில் அங்­கீ­காரம் கிடைக்­காமல் அவஸ்­தைப்­ப­டுவர். காட்டுப் பூக்கள் போல எவ­ராலும் கவ­னிக்­கப்­ப­டாமல் இருப்பர். வித்­தைக்குக் கார­க­னான புதனின் இரா­சியில் பிறந்­தி­ருப்­பதால் அறி­வுக்­க­ட­லா­கவும் திகழ்வர். அதே­வேளைஇ தன்­மான கிர­க­மான செவ்வாய் நட்­சத்­திர அதி­ப­தி­யா­கவும் வரு­வதால் வேலையில் கௌர­வத்­தையே பெரிதும் எதிர்­பார்ப்பர்.

சித்­திரை நட்­சத்­தி­ரத்தின் முத­லிரு பாதத்­தி­னரின் புத்­தியை புதன் ஆள்வார்; உடலை செவ்வாய் ஆள்வார். சோதி­டப்­படி புதனும் செவ்­வாயும் ஒன்­றுக்­கொன்று எதிரும் புத­ரு­மா­னவை. எதி­ரெதிர் அம்சம் கொண்­டவை. அதனால் புத்தி கட்­ட­ளை­யி­டு­வதை உடம்பு செய்ய மறுக்கும். இந்த மாதி­ரி­யா­ன­தொரு சின்­னப்­போ­ராட்டம் உங்­க­ளி­டத்தில் நெடுகிலும் நடந்துகொண்டேயிருக்கும். அலுவலகத்தில் முக்கியமானதொரு வேலையைச் செய்ய வேண்டுமென்று தொடங்கினால் உடம்பு இடக்குப் பண்ணும் உடம்பு நன்றாக இருந்தால் உங்கள் மனம் ஆர்வமின்றி அசிரத்தையாயிருக்கும்.

சித்திரையின் முதல் பாதத்தினர் இராணுவம், சூழல், பாதுகாப்பு, நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம், இரத்த வங்கிஇ மருந்துக்கடை, கனரக வாகனம் ஓட்டுதல் அல்லது பழுதுபார்த்தல், மரவியாபாரம் போன்ற ஏதாவதொரு துறையில் ஆர்வம் கொண்டு இறங்கினால் வெற்றியை வசப்படுத்தலாம்.

இரண்டாம் பாதத்தில் பிறந்தோர் Computer Hardware, Athletics, Gymnastic, கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர், குழந்தைகள் நலவைத்தியர், நூலகர், வனவிலங்குகள் சரணாலயத்தில் பணி, பொம்மைகள் விளையாட்டுச் சாமான்கள் உற்பத்திஇ விற்பனை என்று குறிப்பிட்ட துறைகளில் சேர்ந்தால் உயர்நிலைக்கு வந்துவிடலாம்.