06.02.2016 மன்­மத வருடம் தை மாதம் 23 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

Published on 2016-02-06 09:55:20

சுபயோகம் 

தினசரி கிரகநிலை

06.02.2016 மன்­மத வருடம் தை மாதம் 23 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி முன்­னி­ரவு 11.33 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. பூராடம் நட்­சத்­திரம். மாலை 6.55 வரை. பின்னர் உத்­த­ராடம் நட்­சத்­திரம், சிரார்த்த திதி தேய்­பிறை திர­யோ­தசி சித்த யோகம், சனி மஹா பிர­தோஷம். மாத சிவ­ராத்­திரி. கெருட தரி­சனம் நன்­று, கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மிரு­க­சீ­ரிஷம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள் காலை 7.30– 8.30,மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்) இன்று சனி­ப­க­வானை வழி­படல் நன்று.

மேடம் : முயற்சி, முன்­னேற்றம்

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : லாபம், லஷ்­மீ­கரம்

சிம்மம் : தொல்லை, சங்­கடம்

கன்னி : வரவு, இலாபம்

துலாம் : யோகம், அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : இன்பம், சுகம்

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : குழப்பம், சஞ்­சலம்

கும்பம் : மறதி, நஷ்டம்

மீனம் : நஷ்டம், செலவு

"தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய திரு­மாலை "வெறுப்­பொடு சம­ணர்­முண்டர் வீதியில் சாக்­கி­யர்கள் நின்பால் பொறுப்­ப­ரி­ய­னகன் பேசில் ஆங்கே அவர்கள் தலையை அறுப்­பதே கருமம் கண்டாய் அரங்க மா நக­ரு­ளானே. பொரு­ளுரை ஸ்ரீ ரங்­க­நாதா பிற மதத்தின் உன்னைப் பற்றிப் பொறுக்­க­மு­டி­யாத அபத்­தங்­களைப் பேசினால் அந்த நிந்­த­னையே வியா­தி­யாகி மர­ண­ம­டை­வது நல்­லது. அப்­படி இல்­லாமல் அந்த அவ­தூ­று­களை நான் கேட்க நேர்ந்தால் அவர் சிரத்தை கொய்­வதே எனக்­கு­ரிய கட­மை­யாகும்.(ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

(“ஒரு துளி” மை "இருந்தால் போதும் பல்­லா­யிரம் பேரைச் சிந்­திக்க வைக்­கலாம்." )

சுக்­கிரன் சனி கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண் : 8

பொருந்தா எண்கள் : 3,8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, நீலம்