01.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

2017-10-01 10:05:19

01.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 1.20 வரை. அதன் மேல் துவா­தசி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.38 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. ஏகா­தசி. அமிர்­த­யோகம். மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, ராகு­காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளி­கை­காலம் 3.00– 4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்).

மேடம் : ஆதாயம், லாபம்

இடபம்           :காரி­ய­சித்தி, அனு­கூலம்

மிதுனம்         : வரவு, லாபம்

கடகம் வெற்றி, யோகம்

சிம்மம் : சிரமம், தடை

கன்னி : லாபம், லக் ஷ்­மீ­கரம்

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : செலவு, விரயம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : அமைதி, தெளிவு

கும்பம் : உதவி, நட்பு

மீனம் : பகை, விரோதம்

சுக்­கி­ல­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம் திரு­வோணம் நட்­சத்­திரம் உப­வா­ஸ­மி­ருந்து ‘துவா­ரகா நிலைய வாசன்’ எம்­பெ­ருமாள் ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. இன்று தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேசப் பெருமாள் ஆல­யத்தில் அபி­ஷேகம் நடை­பெற்று அன்­ன­தானம் வழங்­கப்­படும். வேதாந்த தேசிகர் திரு­நட்­சத்­திரம் இரா­மா­னு­ஜ­ருக்கு பின் வைஷ்­ணவ சித்­தாந்­தத்தை சிறப்­பாக விளக்கம் செய்­தவர். ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதி தெளி­யாத மறை நிலங்கள் தெளி­கின்­றோமோ’ என்று தெரி­யாத சமஸ்­கி­ருத மொழிக்கு தமிழில் விளக்கம் அளித்­தவர். இவர் நட்­சத்­திரம் புரட்­டாதி திரு­வோணம். இயற்­றிய நூல்கள் ரகஸ்ய திரை­ய­சாரம், பாஞ்­ச­ராத்ர ரட்சர், திரா­விட வேத உப நிஷர் முத­லி­யன. 

 

சூரியன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right