03.02.2016 மன்மத வருடம் தை மாதம் 3 ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-02-03 10:19:12

கிருஷ்ணபட்ச தசமி திதி முன்னிரவு 11.13 வரை. அதன் மேல் ஏகாதசி திதி அனுஷம் நட்சத்திரம் மாலை 4.31 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம், சிரார்த்த திதி தேய்பிறை தசமி சித்தயோகம், சுபமுகூர்த்த நாள் சமநோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) 

மேடம்: நலம், ஆரோக்கியம்

இடபம்: நட்பு, உதவி 

மிதுனம்: பாசம், அன்பு

கடகம்: நற்செயல், பாராட்டு

சிம்மம்: விருத்தி, யோகம்

கன்னி: அன்பு, இரக்கம்

துலாம்: சிக்கல், சங்கடம்

விருச்சிகம்: குழப்பம், சஞ்சலம்

தனுசு: புகழ், சாதனை

மகரம், அதிர்ஷ்டம், யோகம்

கும்பம்: போட்டி, ஜெயம்

மீனம்: சோர்வு, அகதி

திருமாலை பாசுரம் ஐந்து பெண்டிரால் சுகங்களுய்பான் பெரியதொரு இரும்பை பூண்டு தொண்டு பூண்டமுது உண்ணாத் தொழும்பர் சோறு உவக்குமாறே! பொருள்– மங்கையரால் எல்லா இன்பங்களையும் அனுபவிப்பதாக எண்ணி பெரிய துன்பங்களை ஏற்று, உடலைப் பாதுகாக்கச் சாப்பிட்டு வியாதி வந்தால் மனமுடைந்து இரவு படுக்கும்போதும் கவலைப்படுவதுமான இதுவா வாழ்க்கை! குளிர்ச்சியான துளசி மாலையை மார்பில் அணிந்த சர்வேஸ்வரனது பக்தர்களாய் பாடி ஆடி தொண்டு செய்து அந்த பகவத் அமுதத்தில் ஊறித் திளைக்காத நீசர் உண்டு. உயிர் வளர்ப்பது எதற்காக? (தொண்டர் அடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்)

(“தவறை மன்னிக்கும் குணம் ஒருவனது உயர்ந்த பண்பாட்டை காட்டுகிறது”)

குரு புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)