02.02.2016 மன்மத வருடம் தை மாதம் 19 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2016-02-02 09:17:03

கிருஷ்ணபட்ச நவமி திதி முன்னிரவு 10.05 வரை. அதன் மேல் தசமி திதி. விசாகம் நட்சத்திரம் பிற்பகல் 2 . 46  வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை நவமி. மரண யோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி சுபநேரங்கள் காலை 7.30– 8.30, பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார சூலம் வடக்கு (பரிகாரம் பால்)

மேடம்:     தடை,  தடங்கல்

இடபம்: அமைதி,  சாந்தம்

மிதுனம்: சுகம்,  ஆரோக்கியம்

கடகம்: தனம்,  சம்பத்து

சிம்மம்: நிறைவு,  பூர்த்தி

கன்னி: பிரீதி,  மகிழ்ச்சி

துலாம்: நன்மை,   அதிர்ஷ்டம்

விருச்சிகம்:   உண்மை,  உறுதி

தனுசு: செலவு,  விரயம்

மகரம்: புகழ், பெருமை

கும்பம்:       இன்பம்,  மகிழ்ச்சி

மீனம்: தனம், சம்பத்து

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமாலை” என்னும் திவ்ய பிரபந்தம். “மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்துடைய பேரால் ஷத்திரபந்து மன்றே பரகதி கண்டு கொண்டான்” பொருளுரை: மொய்த்துக் கொண்டிருக்கிற பாபச் சகதியில் நின்று விஷ்ணுவுடைய மூன்றெழுத்துப் பெயரால் தாழ் நிலையிலிருந்து ஷத்திரபந்து என்பவன் ஸ்ரீ வைகுண்டம்   சென்றான். இவ்வளவு தூரம் உன் அடியவர்களுக்கு இரங்கும் ஸ்ரீரங்கநாதா ஏன் உன் பக்தர்களிடம் பித்தாக உள்ளாய்? உன்னைச் சரணடைந்தால் நம் பிறவிப் பயனை அடைவோம் (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“ வெள்ளம் உயர்ந்தால் தாமரை மலர் உயரும். உன் உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய்”)

சந்திரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், பச்சை,

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)