31.01.2016 மன்­மத வருடம். தை மாதம் 17 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

Published on 2016-01-31 10:27:55

கிருஷ்­ண­பட்ச ஸப்­தமி திதி மாலை 6.40 வரை. பின்னர் அஷ்­டமி திதி சித்­திரை நட்­சத்­திரம் பகல் 10.14 வரை. அதன் மேல் சுவாதி நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை ஸப்­தமி சித்த யோகம் கரிநாள் (சுபம் விலக்­குக) சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரேவதி. சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30, பகல் 10.30 – 11.30 மாலை 3.30 – 4.30 ராகு­காலம் 4.30 – 6.00 எம­கண்டம் 12.00 –1.30. குளிகை காலம் 3.00 –4.30. வார சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்).

மேடம : நலம், ஆரோக்­கியம்

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : திறமை, முன்­னேற்றம்

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : விருத்தி, யோகம்

கன்னி: செலவு, விரயம்

துலாம்: புகழ், பாராட்டு

விருச்­சிகம்: வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு: கவனம், எச்­ச­ரிக்கை

மகரம்: புகழ், சாதனை

கும்பம்: அமைதி, தெளிவு

மீனம்: பிர­யாணம், அலைச்சல்

“திரு­மாலை” வேதநூல் பிராயம் நூறு மனி­சர்தாம் புகு­வா­ரேலும் பாதியும் உறங்­கிப்­போகும் பேதை பாலகன் தாரும் பிணி பசி மூப்பு துன்பம் ஆதலால் பிற­வி­வேண்டேன் அரங்­க­மா­ந­க­ரானே. உரை ரங்­க­நாதா! வேத சாஸ்­தி­ரத்தின் படி மனித ஆயுள் நூறு என்­றாலும் அதில் பாதி­யான ஐம்­பது ஆண்­டுகள் தூக்­கத்தில் போகும் மீதி ஐம்­பது ஆண்­டு­களில் பதி­னைந்து ஆண்­டுகள் குழந்தை பரு­வத்­திலும் விளை­யாட்டு பரு­வ­மா­கவும் கழியும் அதன் பின் ஆசையில் அலையும் வாலிப பருவம் பசிக்கு உணவு ஏற்கும் காலம் பல மற்ற கிழப்­ப­ருவம் மற்றும் துன்­பங்­க­ளிலும் கழியும். இப்­படி ஆயுள் முழு­வதும் வீணா­கிற படியால் மானி­டப்­பி­றவி வேண்டாம். (தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

ராகு, புதன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள் 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், வெளிர் நீலம்