"பிணி போக்கும் மருந்­து­களில் சிறந்­தவை பசி, உழைப்பு, வியர்வை”

Published on 2017-08-12 08:28:49

12.08.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 27 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 10.07 வரை. அதன்மேல் சஷ்டி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் காலை 6.25 வரை. அதன் மேல் ரேவதி நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.41 வரை. பின்னர் அஸ்­வினி நட்­சத்­திரம். நட்­சத்­திர அவ­மாகம். சித்­த­யோகம் 6.25 வரை. அதன்மேல் மரண யோகம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45 மர­ண­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தரம். ராகு­காலம் 9.00 –10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளி­கை­காலம் 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) சிரார்த்­த­திதி தேய்­பிறை பஞ்­சமி.

மேடம் : லாபம், லஷ்­மீ­கரம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : ஆர்வம், திறமை

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம்:  பயம், விரோதம்

தனுசு : அமைதி, தெளிவு 

மகரம் : யோகம், அதிர்ஷ்டம்

கும்பம் : அன்பு, இரக்கம்

மீனம் : விவேகம், வெற்றி

இன்று ரேவதி நட்­சத்­திரம் நின்றான், இருந்தான், கிடந்தான் “நின்­றதும், இருந்­ததும், கிடந்­ததும் என் நெஞ்­சுள்ளே” திரு­ம­ழி­சை­யாழ்வார் திரு­வோண திரு­வி­ழாவில் பருந்த பைந்­நா­கனை பள்ளிக் கொண்­டா­னுக்கே பல்­லாண்டு கூறு­துமே! பெரி­யாழ்வார் இன்று அனு­து­விலில் இருக்கும் திரு­வ­ரங்க நாதனை வழி­ப­டு­வது சிறப்பு.

("பிணி போக்கும் மருந்­து­களில் சிறந்­தவை பசி, உழைப்பு, வியர்வை” )

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­வப்பு