29.01.2016 மன்மத வருடம் தை மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-01-29 11:30:57

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பகல் 2.27 வரை. அதன் மேல் சஷ்டி திதி. அஸ்தம் நாள் முழுவதும் (நட்சத்திர திரிதினஸ் பிருக்கு) அதிதி சமநோக்கு நாள் சந்திரஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. சுபநேரங்கள் காலை 09.30 –10.30 , மாலை 4.30 – 5.30. ராகு காலம் 10.30 – 12.00. எமகண்டம் 3.00 – 4.30. குளிகை காலம் 7.30 –9.00. வார சூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்).

மேடம்: தடை, தாமதம்

இடபம்: நட்பு, உதவி

மிதுனம்: மகிழ்ச்சி, அனுகூலம்

கடகம்: பிரயாணம், அலைச்சல்

சிம்மம்: ஊக்கம், உயர்வு

கன்னி: முயற்சி, முன்னேற்றம்

துலாம்: சுகம், ஆரோக்கியம்

விருச்சிகம்: புகழ், பெருமை

தனுசு: லாபம், லக் ஷ்மீகரம்

மகரம்: அமைதி, நிம்மதி

கும்பம்: பயம், விரோதம்

மீனம்: தனம், சம்பத்து

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமலை” காவிலிப் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு கூழ் தருகின்றோம்! ஆவலிப் புடைமை கண்டாய் அறங்கமா நகருளானே. பொருள்: மூன்று உலகங்களையும் பிரளய காலத்தில் வயிற்றில் அடக்கி படைத்தல் காலத்தில் வெளிப்படுத்திய ஆதியானவனே. ஐம்புலன்களையும் கட்டுப்பாடின்றி அலையவிட்டு பாவங்களைப் பற்றி எண்ணாமல் கும்மாளமிட்டு யமன் அவனது தூதர்கள் தலைகளின் மேல் அடியிட்டு அலைகின்றோம். ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே! கட்டித் தங்கமான உன்னை விட ஆபரணத் தங்கத்திற்கு என்ன வலிமையுண்டு (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

 ("காதலர்களின் ஊடல்கள் காதலைப் புதுபிக்கும்.")

சந்திரன், குரு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  1 – 5 

பொருந்தா எண்கள்  9  –  6  –  8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)