28.01.2016 மன்மத வருடம் தை மாதம் 14 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-01-28 09:11:50

கிருஷ்ணபட்ச சதுர்த்திதி பகல் 12.28 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. உத்தரம் நட்சத்திரம் பின்னிரவு 5.06 மணி வரை. அதன் மேல் அஸ்த்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை பஞ்சமி. மரணயோகம்.மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் சதயம். திருவையாறு தியாகப் பிரம்மம். ஸ்ரீ தியாராஜா சுவாமிகள் பஞ்ச கீர்த்தனை விழா.  சுபநேரங்கள் பகல் 12.30 – 1.30, ராகு காலம் 01.30 – 3.00. எமகண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 09.00 –10.30. வார சூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்).

மேடம் : சினம், பகை.

இடபம் : உயர்வு, மேன்மை.

மிதுனம் :     அமைதி, சாந்தம்.

கடகம் : முன்னேற்றம், முயற்சி.

சிம்மம் : செலவு,  விரயம்.

கன்னி : சுகம்,  இன்பம்.

துலாம் : போட்டி,  ஜெயம்.

விருச்சிகம் : வெற்றி, அதிர்ஷ்டம்.

தனுசு : பகை, குரோதம்.

மகரம் : அன்பு, காதல்.

கும்பம் : கவனம், எச்சரிக்கை.

மீனம் : பிரிவு, கவலை.

சண்டேசர் நாயனார் குருபூஜை. திருப்பள்ளியெழுச்சி பாசும் 10. “கடிமலராக கமலங்கள் மலர்ந்தன இவையோ! ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்தருளாயே!" உரை – தடாகங்களில் மலர்கள் மனம் வீசின. கடலின் மேற்பரப்பில் கதிரவன் தோன்றினான். கலவினி சூழ்ந்த ஸ்ரீரங்கத்தின் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமானே தொண்டரடி பொடி என்னும் பெயரைக் கொண்ட அடியேன் துளசி மாலையும் பூக்குடலையும் தோளில் எடுத்துக் கொண்டு உனக்கு அணிவிக்க வருகிறேன். என்மீது இரக்கம் கொண்டு அருள வேண்டியது உன் கடமை பள்ளி எழுந்தருள்வாயாக! ( திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று தொண்டரிஷப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்) 

 ("உழைப்பவன் கையில் தான் உலகம் இருக்கின்றது.")

சூரியன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  1– 5 – 7

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)