15.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 31ஆம் நாள் சனிக்கிழமை

2017-07-16 12:19:08

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பகல் 11.44 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. உத்தரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 10.24 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை ஸப்தமி. சித்தயோகம்.  மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூரம், உத்தரம். சுபநேரங்கள் காலை 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30 வாரசூலம்– கிழக்கு (பரிகாரம்– தயிர்) 

மேடம்: நஷ்டம், கவலை

இடபம்: நிறைவு, மகிழ்ச்சி

மிதுனம்: மறதி, விரயம்

கடகம்: தடை, சஞ்சலம்

சிம்மம்: வாழ்வு, வளம்

கன்னி: கோபம், அவமானம்

துலாம்: களிப்பு, கொண்டாட்டம்

விருச்சிகம்: பகை, விரோதம்

தனுசு: சினம், பகை

மகரம்: இன்பம், மகிழ்ச்சி

கும்பம்: துன்பம், கவலை

மீனம்: அன்பு, ஆதரவு

நாளை ஏயர்கோன் கலிக்காமர் குருபூஜை தினம். சோழ நாட்டு திருபெருமங்கலம் ஊரில் வேளாளர் குளத்தில் அவதரித்தவர். திருப்புன்கூர் இறைவனிடம் பேரன்பு பூண்டவர். மானக் கஞ்சான்டினார் மகளை மணந்தவர். சுந்தரர் பறவையாரிடம் கொண்ட ஊடலை தனிக்க இறைவனை தூதனுப்பியதால் சுந்தரரிடம் பகைமை பூண்டவர். தமக்குற்ற சூலை நோயை தீர்க்க சுந்தரர் வந்தது கண்டு மனம் பெறாமல் உடைவாளால் தம்மை மாய்த்துக் கொண்டவர். சுந்தரரும் உயிர் நீக்க துணிய கலிக்காமர் உயிர் பெற்று எழ சுந்தரரின் நண்பரானார். 

(“ஏயர் கோண் கலிக்காமனடியார்க்கும் அடியேன் ஆரூரர் ஆருரிலம்மானுக் காளே”)

சுக்கிரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 9

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right