27.01.2016 மன்மத வருடம் தை மாதம் 13 ஆம் நாள் புதன் கிழமை

Published on 2016-01-27 08:27:09

கிருஷ்ணபட்ச திரிதியை திதி பகல் 10.43 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. பூரம் நட்சத்திரம் பின்னிரவு 2.44 மணிவரை. அதன் மேல் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்த்தி. அமிர்தயோகம் சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடல் நன்று. கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள், திருவோணம். அவிட்டம். சுபநேரங்கள் பகல் 11.00 – 12.00, மாலை 4.30 – 5.30. ராகு காலம் 12.00 – 1.30 எமகண்டம் 7.30 – 9.00. குளிகை காலம் 10.30 –12.00. வார சூலம் – வடக்கு. (பரிகாரம் – பால்).

மேடம்: மகிழ்ச்சி, சந்தோஷம்

இடபம்: வெற்றி, விவேகம்

மிதுனம்:     அன்பு, பாசம்

கடகம்: ஓய்வு, அசதி

சிம்மம்: பகை, விரோதம்

கன்னி: பரிவு, பாசம்

துலாம்: சோதனை, கஷ்டம்

விருச்சிகம்: கவனம், எச்சரிக்கை

தனுசு: திறமை, ஆர்வம்

மகரம்: முயற்சி, முன்னேற்றம்

கும்பம்: தெளிவு, அமைதி

மீனம்: லாபம், ஆதாயம்

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சி. “ஏதமில் தண்ணுமை ஏக்கம் மத்தளி அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே” பொருள் – குற்றமில்லாத சிறு பறை தாளம் (ஜால்ரா) மத்தளம், யாழ், குழல் முழவம் ஆகிய இவை எல்லா திக்குகளிலும் தேனிசைபாடிய படி கின்னரங்கள் கருடர்கள் கந்தர்வர்கள் இசைக்கின்றனர். இரவெல்லாம் தவம் செய்த ரிஷிகள், அமரர்கள் சாரணர்கள், யட்சர், சித்தர் ஆகியோர் உன்னை நினைத்து மயங்கி திருவடிகளைத் தொழக்காத்திருக்கின்றனர். ஆகையால் இவர்களுக்கு உன்திருமுகம் காட்டவாவது ஸ்ரீரெங்கத்து பெம்மாளே! பள்ளிஎழுந்தருள வேண்டும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

("எனது காதலி என்விழிவிட்டு மறைவதில்லை. அவள் மறைந்த போதிலும் என் விழிகள் அவளை தேடாமலிருந்ததில்லை.")

செவ்வாய், சூரியன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5 

பொருந்தா எண்கள் 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)