26.01.2016 மன்மத வருடம் தை மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2016-01-26 08:06:58

கிருஷ்ணபட்ச துவிதியை திதி காலை 9.23 வரை. அதன் மேல் திரிதியை திதி. மகம் நட்சத்திரம் பின்னிரவு 12.39 மணிவரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை திரிதியை சித்தயோகம். வாஸ்து நாள் வாஸ்து நேரம் பகல் 10.41 முதல் 11.47 வரை. கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள், உத்திராடம் திருவோணம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 4.30 – 5.30. ராகு காலம் 3.00 –4.30. எமகண்டம் 9.00 – 10.30. குளிகை காலம் 12.00 –1.30. வார சூலம் – வடக்கு. (பரிகாரம் – பால்).

மேடம்: வெற்றி, யோகம்

இடபம்: கவனம், எச்சரிக்கை

மிதுனம்:     அமைதி, தெளிவு

கடகம்: திறமை, முன்னேற்றம்

சிம்மம்: பக்தி, ஆசி

கன்னி: பூர்த்தி, நிறைவு

துலாம்: மேன்மை, உயர்வு

விருச்சிகம்: அன்பு, பாசம்

தனுசு: இன்பம், சுகம்

மகரம்: துன்பம், கவலை

கும்பம்: புகழ், சாதனை

மீனம்: நலம், ஆரோக்கியம்

இன்று திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம். தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் துய்யமதி மழிசை பிரான் பிறந்தநாள். அவதரித்த ஊர் திருமழிசை. மாதம் தை நட்சத்திரம் மகம் அம்சம் ஸ்ரீசக்ராம்சம். அருளிய பிரபந்தங்கள் நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம். பாடிய ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்கள் பதினாறு. அன்புடன் அந்தாதி தொண்ணூற்று ஆறு உரைத்தா வாழியே! அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே! நன்புவியில் நாலாயிரத்து எழு நூற்றான் வாழியே. நாங்கள் பக்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே! (நாளை திருப்பள்ளியெழுச்சி தொடரும்)

("அமைதியான நாயிடத்தும் அசைவில்லாத தண்ணீரிடத்தும் எச்சரிக்கையாய் இரு.")

சனி, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 

பொருந்தா எண்கள் 8, 2, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)