25.01.2016 மன்மத வருடம் தை மாதம் 11 ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-01-25 09:01:46

கிருஷ்ணபட்ச பிரதமை திதி காலை 8.28 வரை. அதன் மேல் துவிதியை திதி. ஆயிலியம் நட்சத்திரம் முன்னிரவு 11.00 மணிவரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை துவிதியை. சித்தியோகம். கரிநாள்(சுபம் விலக்குக) கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம  நட்சத்திரங்கள் பூராடம்,உத்திராடம். சுபநேரங்கள் காலை 6.30 – 7.30, 9.00–10.00  மாலை 4.30 – 5.30. ராகு காலம் 7.30 –9.00. எமகண்டம் 10.30 – 12.00. குளிகை காலம் 1.30 –3.00. வார சூலம் – கிழக்கு. (பரிகாரம் – தயிர் ).

மேடம்: பக்தி, அனுக்கிரகம்

இடபம்: தெளிவு, அமைதி

மிதுனம்:          தடை, சிரமம்

கடகம்: அசதி,வருத்தம்

சிம்மம்: களிப்பு, கொண்டாட்டம்

கன்னி: நஷ்டம், கவலை

துலாம்: சோர்வு, அசதி

விருச்சிகம்: வரவு, லாபம்

தனுசு: உயர்வு,  ஊக்கம்

மகரம்: பிரயாணம், அலைச்சல்

கும்பம்: கோபம், அவமானம்

மீனம்: புகழ், பாராட்டு

திருப்பள்ளி யெழுச்சி (தொண்டரடிப் பொடியாழ்வார்)" வம்பவிழ் வானவர் வாயுறை பழங்க அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே" உரை: ஸ்ரீரங்கநாதா தேவர்கள் நீ கண்மலரும் நேரம் மங்கள சகுனத்திற்காக சங்க, பதுமநிதிகள், காமதேனு, அருகம்புல்லோடு வந்திருக்கிறார்கள். அழகிய கண்ணாடி போன்ற மங்கள உபகரணங்களோடு ரிஷிகளும் இசைக்காகத் தும்புறுவும் நாரதரும் வந்திருக்கின்றனர். இக்காட்சியைக் காண ஆதவன் வான வீதியில் முன்னேறுகிறான். ஆகாயத்திலிருந்து இருள் அகன்று விட்டது. மனவெளிச்சத்திற்கு நீ கண்விழித்து அருள் பாலிக்க வேண்டும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

("நாம் செல்லும் வழியில் பாசி உண்டு. பள்ளமும் உண்டு ஆதலால் கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்காதே.")

சுக்கிரன், சனி கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2 , 5

பொருந்தா எண்கள் 7 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)