15.06.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 1 ஆம் நாள். உத்தராயணம் கிரிஷ்மருது ஆனி (மிதுன மாதம்) 1 ஆம் நாள் வியாழக்கிழமை

2017-06-15 08:59:20

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பின்னிரவு 1.35 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 2.31 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி. சூன்யம். சித்தயோகம் பகல் 2.31 வரை.  பின்னர் மரணயோகம். கரிநாள். சுபம் விலக்குக. மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூசம், ஆயில்யம். சுபநேரம் பகல் 10.30– 11.30, ராகுகாலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம்– தெற்கு (பரிகாரம்– தைலம்) ஷடசீதி புன்யகாலம் ஸ்மார்க்கம் கிருஷ்ணபட்ச சஷ்டி.

மேடம்: அமைதி, தெளிவு

இடபம்: ஆர்வம், முன்னேற்றம்

மிதுனம்: உயர்வு, மேன்மை

கடகம்: அன்பு, பாசம்

சிம்மம்: தனம், சம்பத்து

கன்னி: வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம்: புகழ், பெருமை

விருச்சிகம்: லாபம், லக்ஷ்மீகரம்

மகரம்: உழைப்பு, உயர்வு

கும்பம்: சுகம், ஆரோக்கியம்

மீனம்: நம்பிக்கை, வெற்றி

இன்று அவிட்டம் நட்சத்திரம். அஷ்ட வசுக்கள் இந் நட்சத்திர தேவதைகளாவர். அஷ்ட வசுக்களால் போற்றி துதிக்கப் பெறும் அளந்த சயன பத்மநாமப் பெருமானை இன்று வழிபடுதல் நன்று. பாம்புத் தலை மேலே நடஞ் செய்யும் பாதத்தினைப் புகழ்வோம். மாம்பழ வாயினிலே குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம்.

(நரி தன் கனவில் கூட கோழிகளை எண்ணிக் கொண்டே இருக்கும். நயவஞ்சகரும் அவ்விதமே”)

சுக்கிரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 1

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right