24.01.2016 மன்மத வருடம். தை மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

Published on 2016-01-23 10:06:57

சுபயோகம்

24.01.2016 மன்மத வருடம். தை மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

பெளர்ணமி திதி காலை 8.07 வரை. பின்னர் பிரதமை திதி பூசம் நட்சத்திரம் இரவு 9.47 வரை. அதன் மேல் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி. பிரதமை சித்தயோகம் தை பூச திருநாள். சுபநேரங்கள் காலை 8.30 – 9.00, மாலை 3.30 – 4.30. ராகு காலம் 4.30 –6.00. எமகண்டம் 12.00 – 1.30. குளிகை காலம் 3.00 – 4.30. வார சூலம் –மேற்கு (பரிகாரம் – வெல்லம்). மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் மூலம்– பூராடம்.

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: பிரீதி, மகிழ்ச்சி

மிதுனம்: நலம், ஆரோக்கியம்

கடகம்: வெற்றி, அதிஷ்டம்

சிம்மம்: உயர்வு, மகிழ்ச்சி

கன்னி: திறமை, முன்னேற்றம்

துலாம்: களிப்பு, கொண்டாட்டம்

விருச்சிகம்: சிக்கல், கவலை

தனுசு: பகை, விரோதம்

மகரம்: சிந்தனை, குழப்பம்

கும்பம்: உயர்வு, மேன்மை

மீனம்: அன்பு, பாசம்

திருபள்ளிழெழுச்சி ``அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ! அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயோ’’ உரை–பெருமாளே! தேவரீர் திருக்கோயிலின் வாசலிலே உன்னைத் தேடும் தேவேந்திரனும் ஐராவத யானையும் தேவர்களும் அருந்தவ முனிவர்களும் மருத கணங்களும் இயக்கரும் கந்தர்வரும் நெருக்கவும் வித்யாதர்களும் தள்ளவும் மயங்கி நின்றனர். ஆதலால் மண்ணிலும் விண்ணிலும் இடம் இல்லை அரங்கனே பள்ளி எழுந்தருள்க– (தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்!

(``நீ வாழ்க்கையில் உயரும் போது மனிதர்களிடம் சுமுகமாக இரு. ஏனெனில் நீ கீழே இறங்கும் போது அவர்களை மீண்டும் சந்திப்பாய்’’)

சுக்கிரன், கேது ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 2

பொருந்தா எண்கள் 3, 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)