பிறந்த திகதி என்ன.? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்

2017-06-04 14:35:21

ஜோதி­டத்தில் ஒருவர் பிறந்த திக­தியை வைத்து பொருத்தம் பார்த்து, எந்த திக­தியில் பிறந்த பெண்ணை திரு­மணம் செய்தால் அவர்­களின் வாழ்க்கை சிறப்­பாக இருக்கும் என்­பதை பற்றி கூறி­வி­டலாம்.

1,10,19,28- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திக­தி­களில் பிறந்­த­வர்­களை திரு­மணம் செய்து கொள்­ளலாம். இவர்கள் 1-ஆம் எண்ணில் பிறந்த பெண்­களை தவிர்ப்­பது நல்­லது.

மேலும் இவர்­க­ளு­டைய திரு­மணத் திகதி 1, 10, 19, 28, 6, 15, 24 ஆகிய திக­தி­க­ளிலும், கூட்டு எண் 1 அல்­லது 6 போன்ற திக­தி­களில் கூட திரு­மணம் செய்து கொள்­வது நல்­லது.

2,11,20,29- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்கள் 1, 3, 5, 6, 7 ஆகிய எண்­களில் பிறந்த பெண்கள் ஏற்­ற­வர்கள். ஆனால், 8 அல்­லது 9 எண் உடைய பெண்­களை மட்டும் திரு­மணம் செய்யக் கூடாது.

இவர்கள் தங்­க­ளது திரு­ம­ணங்­களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16, 25 ஆகிய திக­தி­க­ளிலும், மற்றும் 1, 6, 7 ஆகிய எண்கள் கூட்டு எண்­க­ளாக வரும் தினங்­க­ளிலும் திரு­மணம் செய்து கொள்­வது நல்­லது.

3,12,21,30- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்கள் 2, 3, 9 ஆகிய எண்­களில் பிறந்­த­வர்­களைத் திரு­மணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனி­மை­யாக இருக்கும்.

4,13,22,31- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்கள் 1, 5, 6, 8ஆகிய திக­தி­களில் பிறந்த பெண்­களை மணந்து கொண்டால் நல்ல திரு­மண வாழ்க்கை அமையும். இவர்கள் தங்­க­ளு­டைய திரு­ம­ணத்தை 1 அல்­லது 6 எண் வரும் திக­தி­களில் வைத்துக் கொள்­வது சிறப்பு.

5, 14, 23- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்கள் 1, 2, 3, 6 பிறந்­த­வர்­களை திரு­மணம் செய்­யலாம். இவர்கள் திரு­மணம் செய்­வ­தற்கு 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய திக­தி­களும், கூட்டு எண் 1, 9 வரும் திக­தி­களும் உகந்­தவை ஆகும்.

6, 15, 24- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்கள் 6, 9 எண்­களில் பிறந்த பெண்ணை மணந்து கொண்டால், நல்ல திரு­மண வாழ்க்கை அமையும். 1, 4, 5, 3 ஆம் எண்ணில் பிறந்த பெண்ணை மணக்கக் கூடாது.

மேலும் இவர்­களின் திரு­மணத் திகதி 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய திக­தி­க­ளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் திக­தி­க­ளிலும் செய்து கொள்­வது மிகுந்த நன்மை கிடைக்கும்.

7, 16, 25- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய திக­தி­களில் பிறந்த பெண்­களால் மிகவும் இனிய இல்­லறம் அமையும். இவர்கள் 8-ஆம் திகதி பிறந்­த­வர்­களை மணக்கக் கூடாது. இவர்கள் திரு­மணம் செய்து கொள்ளும் நாட்­களின் எண்கள் 1, 2, 6 வரு­வது சிறந்­தது.

8, 17, 26- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்களுக்கு 1, 4 ஆகிய திக­தி­களில் பிறந்த பெண்­களே ஏற்­ற­வர்கள். ஆனால் இவர்கள் 8-ஆம் எண்­வரும் பெண்ணை மட்டும் திரு­மணம் செய்யக் கூடாது.

2, 7 ஆகிய கூட்டு எண் வரும் பெண்­களைத் தவிர்த்து விடு­வது நல்­லது. இவர்கள் கூட்டு எண் 1, 6 வரும் திக­தி­களில் திரு­மணம் செய்து கொள்­வது மிகவும் நல்­லது.

9, 18, 27- ஆம் திக­தியில் பிறந்­த­வர்கள்

இவர்­க­ளு­டைய நட்பு எண்­க­ளான 3, 5, 6, 9 ஆகிய எண்­களில் பிறந்­த­வர்­களை திரு­மணம் செய்து கொண்டால், இவர்­க­ளுக்கு ஆனந்­த­மான திரு­மண வாழ்க்கை அமையும்.

இவர்கள் கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக் கூடாது. இவர்களின் திருமணத் திகதி கூட்டு எண் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right