23.01.2016 மன்மத வருடம் தை மாதம் 9 ஆம் நாள் சனிக்கிழமை.

2016-01-23 10:06:04

சுபயோகம்

23.01.2016 மன்மத வருடம் தை மாதம் 9 ஆம் நாள் சனிக்கிழமை.

சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி காலை 8.17 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. புனர்பூசம் நட்சத்திரம் முன்னிரவு 9.06 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. பௌர்ணமி. சித்தியோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம  நட்சத்திரங்கள் கேட்டை, மூலம். சுபநேரங்கள் காலை 7.30 – 08.00, மாலை 4.30 – 5.30. ராகு காலம் 09.00 –10.30. எமகண்டம் 1.30 – 3.00. குளிகை காலம் 6.00 –7.30. வார சூலம் – கிழக்கு. (பரிகாரம் – தயிர் ).

மேடம்: மறதி, விரயம்

இடபம்: ஓய்வு, அசதி

மிதுனம்: புகழ், பாராட்டு

கடகம்: சோதனை, சஞ்சலம்

சிம்மம்: அமைதி, சாந்தம்

கன்னி: குழப்பம், சஞ்சலம்

துலாம்: ஊக்கம், உயர்

விருச்சிகம்: ஜெயம், புகழ்

தனுசு: நலம், ஆரோக்கியம்

மகரம்: பொறுமை, நிதானம்

கும்பம்: தனம், பணவரவு

மீனம்: நன்மை, அதிர்ஷ்டம்

தொண்டர் அடிப்பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சி இரவியர் மணி நெடுற்தேரோடும் இவரோ அருவரை அனை நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே உரை அழகிய பெரிய தேரோடு பன்னிரண்டு சூர்யர்களும் இறையவரின் பதினொரு பொருப்பாளிகளும் மயில் ஊர்தியுடைய முருகனும் மருத கணங்களும் வசுக்களும் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு நெருங்கி நிற்க இவர் தம் குதிரைகளும் தேர்களும் பாட்டும் ஆட்டமுமாய் தேவக் கூட்டம் நெருங்கி நெருங்கி பெரியமலை போன்ற கோயிலில் உள் திரு நோக்கிலே நிற்கின்றது. 

("தேவைக்கு ஆசைப்படுவது தவறு இல்லை. ஆனால் தேவையற்ற அனைத்திற்கும் ஆசைப்படுவது தவறு.")

புதன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9

பொருந்தா எண்கள் 3 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right