24.05.2017 ஏவிளம்பி வருடம் வைகாசி மாதம் 10 ஆம் நாள் புதன்கிழமை

2017-05-24 10:39:21

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி காலை 6.41 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 2.28 வரை. அதன் மேல் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. சதுர்த்தசி சித்தாமிர்த யோகம். கீழ் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் சித்திரை. சுபநேரங்கள் பகல் 10.30– 11.30,  மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகைகாலம் 10.30– 12.00, வார சூலம் –வடக்கு (பரிகாரம் –பால்) கழற் சிங்கர் நாயனார் குருபூஜை. மாத சிவராத்திரி. நாளை ஸர்வ அமாவாஸ்யை தர்ப்பணம்.

மேடம் : நட்பு, ஆதாயம்

இடபம் : சுகம், ஆரோக்கியம்

மிதுனம்     :  அசதி, சோம்பல்

கடகம் : கவலை, கஷ்டம்

சிம்மம் : தடை, தாமதம்

கன்னி : லாபம், லக்ஷ்மீகரம்

துலாம் : புகழ், பெருமை

விருச்சிகம் : நிறைவு, பூர்த்தி

தனுசு : நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் : செலவு, விரயம்

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : நட்பு, உதவி

“கல்வி கற்காதிருப்பது நல்லது எப்போது? கற்றும் அறிவில்லாதபோது. எதுவும் எழுதாதிருப்பது நல்லது எப்போது? எழுதியும் ஒழுக முடியாதபோது. ஒன்றும் பேசாதிருப்பது நல்லது எப்போது? பேசியும் அதன்படி நடக்க முடியாத போது. சுதந்திரம் பெறாதிருப்பது நல்லது எப்போது? பெற்றும் நாம் வாழ முடியாதபோது. சுறுசுறுப்பாயிரு ஆனால் பயப்படாதே. பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே. வீரனாயிரு ஆனால் போக்கிரியாயிராதே. அன்பாயிரு ஆனால் அடிமையாகாதே. கொடையாளியாயிரு ஆனால் ஓட்டாண்டியாகிவிடாதே. சிக்கன மாயிரு ஆனால் கருமியாயிராதே. இரக்கம் காட்டு  ஆனால் ஏமாந்து போகாதே இதன் வேற்றுமையை உணர்ந்து நட”  –கி.ஆ.பெ. விசுவநாதம் சுக்கிரன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண் : 9

பொருந்தா எண்கள் : 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள், கலந்த நிறங்கள். 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

                                                                                                                                         

முக்கிய செய்திகள்

icon-left
icon-right